தூத்துக்குடி, தூத்துக்குடி சிவந்தாகுளம் பகுதியில் சட்ட விரோத விற்பனைக்காக 5.5 கிலோ கஞ்சா வைத்திருந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போலீசார் ரோந்து பணி தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் மேரி ஜெமிதா தலைமையிலான போலீசார் சிவந்தாகுளம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கே சந்தேகப்படும்படி 2 பைக்குகளில் வந்த நபர்களை பிடித்து போலீசார் விசாரணை செய்தபோது, அவர்கள் விற்பனைக்காக கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. 5.5 கிலோ கஞ்சா, 2 பைக் பறிமுதல்; 5 பேர் கைது தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் மேரி ஜெமிதா வழக்குப்பதிவு செய்து சட்டவிரோத விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த தூத்துக்குடி லூர்தம்மாள்புரத்தைச் சேர்ந்த வேல்முருகன் மகன் சங்கர் (வயது 20), சங்கரப்பேரி பகுதியைச் சேர்ந்த கனிஅரசன் மகன் வெங்கடேஷ்(23), பிரையன்ட்நகரைச் சேர்ந்தவர்களான செந்தில் மகன் காளிதாஸ்(22), சிவக்குமார் மகன் முத்துமாதவன்(19) மற்றும் வள்ளிநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து மகன் சுடலைசெல்வம்(20) ஆகிய 5 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து 5 கிலோ 500 கிராம் கஞ்சா மற்றும் 2 பைக்குகளையும் பறிமுதல் செய்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/55-kg-of-ganja-2-bikes-seized-in-thoothukudi-5-people-arrested




