ஈரோடு, ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதி இருக்கும் தேசிய நெடுஞ்சாலையில், கரும்பு கட்டுகளை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென சாலைக்குள் புகுந்த காட்டு யானை, அந்த லாரியை வழிமறித்தது. யானையை பார்த்ததும் லாரியின் வேகத்தை ஓட்டுனர் குறைத்தார். இதையடுத்து அந்த யானை லாரியின் அருகே வந்து, அதில் இருந்த கரும்பு கட்டுகளை எடுத்து சாப்பிட்டது. சாலையை வழிமறித்து யானை நின்றுகொண்டிருந்ததால், வாகனங்கள் செல்ல முடியாமல் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனிடையே லாரி ஓட்டுநர் மெதுவாக வாகனத்தை இயக்கி, யானையிடம் இருந்து லாவகமாக தப்பிச் சென்றார். பின்னர் யானை மீண்டும் காட்டுப்பகுதிக்குள் சென்றது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/erode-wild-elephant-intercepts-lorry-on-national-highway-and-eats-sugarcane




