அருள்புரம், திருப்பூர் அருகே கணபதிபாளையத்தில் மகளிர் சுய உதவிக் குழு கட்டிடத்தில் கிளை தபால் அலுவலகம் கடந்த 1980 - ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதை, பெத்தாம்பாளையம், கணபதிபாளையம், மாதேஸ்வரன் நகர், எஸ்.ஆர்.சி. காலனி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். மேலும், ஏராளமானபொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் கணக்கு வைத்துள்ளனர். பொதுமக்கள் கோரிக்கை இதேபோல், சேமிப்பு திட்டங்கள், காப்பீட்டு திட்டங்கள் உள்ளிட்ட பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இந்த கிளை தபால் அலுவலக கட்டிடத்தின் மேல் பகுதியில் "இந்திராகாந்தி மகளிர் சுய உதவி குழு, அரிசி மண்டி மற்றும் மளிகை கணபதிபாளையம்" என்று எழுதப்பட்டு இருந்தது. இதன் காரணமாக இது தபால் அலுவலகமா? அல்லது அரிசி மண்டியா? என்ற குழப்பம் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டு வந்தது. எனவே இதை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். மக்கள் நன்றி மேலும் இதுகுறித்த செய்தி ‘தினத்தந்தி’யில் படத்துடன் பிரசுரிக்கப்பட்டது. இதன் எதிரொலியாக, கணபதிபாளையம் கிளை அஞ்சலகம் என்று எழுதப்பட்டு சீரமைக்கப்பட்டது. இதையடுத்து செய்தி வெளியிட்ட ‘தினத்தந்தி’க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அப்பகுதி மக்கள் நன்றி மற்றும் பாராட்டுகளை தெரிவித்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/renovation-of-post-office-building-near-tiruppur




