புதுடெல்லி, இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா முழுமையாக வென்றிருந்தால், டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் 4-வது இடத்துக்கு முன்னேறி இருக்கும். 2-வது டெஸ்ட் டிராவில் முடிந்ததால் 51.52 சதவீத புள்ளியுடன் 5-வது இடத்தில் நீடிக்கிறது. இது பற்றி இந்திய கேப்டன் சுப்மன் கில் கூறுகையில், நவம்பர் மாதம் நாங்கள் நியூசிலாந்தில் 2 டெஸ்ட் தொடரில் ஆடுகிறோம். அதைத் தொடர்ந்து உள்நாட்டில் ஒரு சிறப்பான தொடரும் (ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 டெஸ்ட்) காத்திருக்கிறது. நியூசிலாந்துக்கு எதிரான தொடர் சிறப்பாக அமைந்தால், அதன் பிறகு நமக்கு வாய்ப்பு இருக்கும் வரை நம்பிக்கையுடன் தொடர்ந்து போராடுவோம். டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவோம் என்று நம்புகிறேன்.' என்றார். மேலும் கில் கூறுகையில், 'இந்த டெஸ்டில் இலங்கை வீரர்கள் கடைசி 3 நாட்களில் பிரமாதமாக விளையாடினர். தொடக்கத்தில் தாக்குதல் பாணியை கையாண்டோம். ஆனால் போக போக ஆடுகளம் மிகவும் மெதுவான தன்மையுடன் காணப்பட்டது. சுழன்று திரும்புவதும் மெதுவாக இருந்தது. அதனால் பேட்டிங்குக்கு எளிதாக இருந்தது. எங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்து பார்த்தோம். முடிவு கிடைக்காதது ஏமாற்றமே. வெற்றி தோல்வி எங்களுக்கு இல்லை என்றாலும், டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை வென்றிருக்கிறது' என்றார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/sports/cricket/we-will-qualify-for-the-test-championship-final-gill




