ஹரியானா மாநிலம் பரிதாபாத்தில் உள்ள வித்யா நிகேதன் பள்ளியில் 11வது வகுப்பு படிக்கும் ஜான்வி(16) என்ற மாணவி பள்ளியின் மூன்றாவது மாடியில் இருந்து கீழே குதித்துவிட்டார். இதையடுத்து அம்மாணவி அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனலிக்காமல் இறந்து போனார். இது குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்ற்னர். பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் இது தொடர்பான தகவல்களை சேகரித்து வருகின்றனர். இது குறித்து தற்கொலை செய்து கொண்ட மாணவியின் தந்தை பிரமோத் கூறுகையில், ''பள்ளி வகுப்பறையில் பிரியாணி சாப்பிடுவது தொடர்பாக மாணவிகளிடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இந்த சண்டையில் எனது மகளுக்கு தொடர்பு இல்லை என்று சக மாணவிகள் என்னிடம் தெரிவித்தனர். ஆனாலும் வகுப்பு ஆசிரியர் எனது மகளை நான்கு மணி நேரம் வகுப்புக்கு வெளியில் வெயிலில் நிற்கும்படி செய்து தண்டனை கொடுத்துள்ளார். அந்த தண்டனையால் எனது மகள் அவமானத்தில் பள்ளி கட்டிடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்''என்று தெரிவித்தார். ஆனால் இந்த குற்றச்சாட்டை பள்ளி நிர்வாகம் மறுத்துள்ளது. பள்ளி முதல்வர் ஆர்.கே. சர்மா இது குறித்து அளித்த பேட்டியில்,'' அந்த மாணவிக்குத் தண்டனை எதுவும் அளிக்கப்படவில்லை. கழிவறைக்குச் செல்ல வேண்டும் என்று கூறி அந்த மாணவி வகுப்பறையிலிருந்து வெளியேறினார். ஆனால், அவர் பள்ளியின் மூன்றாவது தளத்திற்குச் சென்று அங்கிருந்து கீழே குதித்தார்''என்று தெரிவித்துள்ளார். உண்மையில் என்ன நடந்தது என்று சக மாணவிகளிடம் போலீஸார் வாக்குமூலம் வாங்கி வருகின்றனர். தற்கொலை தடுப்பு மையம் முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.vikatan.com/crime/dispute-over-biryani-at-school-teacher-makes-student-stand-in-the-sun-for-4-hours-student-jumps-from-third-floor




