இந்தியாவில் 100 சதவீத எத்தனால் இயங்கும் ‘ஃப்ளெக்ஸ்- பியூல்’ கார்களின் பயன்பாட்டை அதிகரிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அடுத்த 1 முதல் 2 மாதங்களில் மகிந்திரா, டொயோட்டா, சுசுகி மற்றும் ஹூண்டாய் நிறுவனங்கள் ப்ளெக்ஸ்-பியூல் என்ஜின் கொண்ட கார்களை அறிமுகம் செய்ய உள்ளதாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மந்திரி நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். 100 சதவீதம் எத்தனால் அல்லது பெட்ரோல் என இரண்டிலும் இந்த வாகனத்தை பயன்படுத்த முடியும் வகையில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு பலன் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய நிதின் கட்காரி கூறியதாவது: பெட்ரோல் மற்றும் டீசல் போன்ற இறக்குமதி செய்யப்படும் எரிபொருட்களை சார்ந்திருப்பதை குறைத்து, உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் எத்தனாலை அதிக அளவில் பயன்படுத்துவதே அரசின் நோக்கம். மக்காச்சோளத்தில் இருந்து எத்தனால் தயாரிக்க அனுமதி அளித்ததன் மூலம் விவசாயிகளுக்கு பலன் கிடைத்துள்ளளது. வ் வாகனம் பாதிக்கப்படாது எத்தனால் கலப்பு பெட்ரோலால் தங்கள் வாகனம் பாதிக்கப்பட்டது என்று யாரும் கூற முடியாது. இதை ஒரு சவாலாகவே கூறுகிறேன். தவறான நோக்கங்கள் கொண்ட சிலரால் எத்தனால் கலப்பு குறித்து பொய்யான தகவல்கள் பரப்பப்படுகின்றன. எத்தனால் கலப்பு முடிவு மேற்கொள்ளப்பட்டதன் பின்னணியில் பல சிறந்த காரணங்கள் உள்ளன. முக்கியமாக விவசாயத் துறையை பன்முகமாக்கும் முக்கிய முயற்சி இதுவாகும். விவசாயக் கழிவுகளில் இருந்து உற்பத்தி செய்யப்படும் எத்தனால் இப்போது எரிசக்தித் துறையில் பயன்படுத்தும் பொருளாக மாறியுள்ளது. நமது விவசாயிகள் உணவு வழங்குபவா்களாக மட்டும் இல்லாமல், எரிசக்தி வழங்குபவா்களாகவும் உயா்ந்துள்ளனா். எரிபொருள் இறக்குமதி எத்தனால் உற்பத்தி அதிகரிப்பால் உத்தர பிரதேசம், பிகாா் விவசாயிகளுக்கு மட்டும் கூடுதலாக ரூ.45,000 கோடி வருவாய் கிடைத்துள்ளது. அதே நேரத்தில் எரிபொருள் இறக்குமதியைச் சாா்ந்திருப்பது சற்று குறைந்துள்ளது. இது ஒரு தரப்பினா் விரும்பாத மாற்றமாக உள்ளது. அதே நேரத்தில் மத்திய அரசு எதிா்கால நலன்களை முன்வைத்து தொடா்ந்து செயல்படும் என்பதில் எவ்வித மாற்றமும் இல்லை” என்றார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/india/vehicles-which-can-run-on-100-ethanol-may-hit-roads-in-2-months-nitin-gadkari




