திருச்செந்தூர், விடுமுறை தினமான இன்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் சுமார் 4 மணி நேரம் வரிசையில் காத்து நின்று சாமி தரிசனம் செய்தனர். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்கின்றனர். அதேபோல் திருவிழா மற்றும் சில முக்கிய தினங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். 4 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் இந்நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால், வழக்கமான நாட்களைவிட இன்று கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவு காணப்பட்டது. பக்தர்கள் அதிகாலை முதலே கடல் மற்றும் நாழிக்கிணறு தீர்த்தத்தில் புனித நீராடி முருகப்பெருமானை தரிசனம் செய்தனர். பொது தரிசன வழியில் சென்ற பக்தர்கள், நீண்ட வரிசையில் சுமார் 4 மணி நேரம் காத்து நின்று சாமி தரிசனம் செய்தனர். ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு இன்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் வழக்கம் போல் நடந்தன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/devotional/holiday-devotees-throng-tiruchendur-wait-for-4-hours-to-have-darshan-of-the-lord




