அரக்கோணம், அரக்கோணத்தில் கணவரின் மரணம், மீளமுடியாத துயரத்தில் இரு பிள்ளைகளுடன் ரெயில் முன் பாய்ந்த தாய் தற்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திடீரென மரணம் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் மங்கம்மாபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் வள்ளி (27). இவருடைய கணவர் கோட்டையா (30). அம்மிக்கல் செதுக்கும் தொழிலாளி. இவர்களுக்கு பரத் (7), சந்தோஷ் (3) ஆகிய 2 மகன்கள் இருந்தனர். இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோட்டையா உடல்நலக்குறைவால் திடீரென மரணமடைந்தார். வறுமை கணவரின் மறைவால் வள்ளி மீளமுடியாத துயரத்தில் மூழ்கினார். மேலும் குடும்பத்தை நடத்த வருமானம் இன்றியும், பிள்ளைகளை காப்பாற்ற வழியின்றியும் கடும் வறுமையில் தவித்து வந்துள்ளார். ரெயில் முன் பாய்ந்தனர் கணவரை இழந்த சோகமும், வறுமையும் வாட்டியதால் வள்ளி வாழ்க்கையில் விரக்தியடைந்தார். இதனால் தன் பிள்ளைகளுடன் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தார். இன்று காலை சுமார் 9 மணியளவில், மங்கம்மாபேட்டை ரெயில் தண்டவாள பகுதிக்கு தன் 2 மகன்களையும் வள்ளி அழைத்து சென்றார். அப்போது சென்னையிலிருந்து திருப்பதி நோக்கி சென்ற மின்சார ரெயில் வருவதை கண்ட வள்ளி, தன் இரு குழந்தைகளையும் கட்டியணைத்தபடி ஓடும் ரெயில் முன்பு திடீரென பாய்ந்தார். உடல் சிதறி பலி இதில் ரெயிலில் அடிபட்டு தூக்கி வீசப்பட்ட வள்ளி மற்றும் அவரது மகன்கள் பரத், சந்தோஷ் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து தகவலறிந்த அரக்கோணம் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். உயிரிழந்த 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்குப்பதிவு இந்த நெஞ்சை உருக்கும் துயர சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வறுமை காரணமாக 2 பிள்ளைகளுடன் தாய் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/arakkonam-mother-dies-by-suicide-with-two-sons-in-front-of-train




