திருமலை, திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினமும் ஆந்திரா மட்டுமின்றி தெலுங்கானா, கர்நாடகம், தமிழகம், மராட்டியம் உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். இதனால் கோவிலில் எப்போதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழியும். இதேபோல, நேற்று முன்தினம் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அன்று 73 ஆயிரத்து 285 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 32 ஆயிரத்து 334 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். அன்று தேவஸ்தானம் அறிவித்த ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.4 கோடியே 39 லட்சம் ஆகும். அன்று 3 லட்சத்து 88 ஆயிரம் லட்டு பிரசாதம் விற்பனை செய்யப்பட்டன. 2 லட்சத்து 22 ஆயிரம் பக்தர்கள் அன்னப்பிரசாதம் பெற்றனர். திருமலை அஸ்வினி மருத்துவமனையில் 3 ஆயிரத்து 384 பக்தர்கள் மருத்துவச் சிகிச்சை பெற்றனர். 18 மணிநேரம் காத்திருப்பு நேற்றைய நிலவரப்படி திருப்பதி அலிபிரி டோல்கேட்டில் வாகனச் சோதனைக்காக ஏராளமான வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக அணிவகுத்து நின்றன. திருமலையில் நாராயணகிரி தோட்டத்தில் உள்ள ஜெர்மென் செட் கொட்டகைகளில் பக்தர்கள் நிரம்பினர். அதேபோல் வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 31 கம்பார்ட்மெண்டுகளில் பக்தர்கள் நிரம்பி வெளியே கிருஷ்ணதேஜா விருந்தினர் மாளிகை அருகில் வரை நீண்ட வரிசையில் காத்திருந்தனர். தரிசன வரிசையில் சென்ற பக்தர்களுக்கு ஸ்ரீவாரி சேவா சங்க தொண்டர்கள் அன்னப்பிரசா தம், குடிநீர், பால், காபி, மோர் ஆகியவற்றை வழங்கினர். தேதி, நேரம் குறிப்பிடப்பட்ட ‘டைம் ஸ்லாட்' டோக்கன்கள் இல்லாமல் இலவச தரிசனத்தில் சென்ற பக்தர்கள் சுமார் 18 மணி நேரம் காத்தி ருந்து சாமி தரிசனம் செய்ததாக, கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/devotional/devotees-had-darshan-at-the-tirupati-lord-venkateswara-ezhumalayan-temple-after-waiting-for-18-hours




