குலசை, ஞானமூர்த்தீஸ்வரர் சமேத முத்தாரம்மன் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் உலகப்புகழ்பெற்ற ஞானமூர்த்தீஸ்வரர் சமேத முத்தாரம்மன் கோவில் உள்ளது. ஆடி கொடை விழா இக்கோவிலில் ஆடி கோடை விழா நேற்று முன் தினம் தொடங்கியது. கோடை விழாவில் வில்லிசை நிகழ்ச்சி நடந்தது. விழாவின் சிகர நாளான நேற்று காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் கும்பம் வீதி உலா புறப்பட்டது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட புனித நீர் நிரப்பப்பட்ட கும்பத்தை கோவிலில் இருந்து முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக எடுத்து சென்றனர். பின்னர் மாலையில் கும்பம் மீண்டும் கோவிலை வந்தடைந்தது. சிறப்பு அலங்கார தீபாராதனை இதையடுத்து அம்மனுக்கு புனிதநீரால் அபிஷேகம் செய்யப்பட்டது. இரவில் அம்மனுக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து கும்பம் திருவீதி உலா சென்று, மீண்டும் கோவிலை வந்தடைந்தது. குவிந்த பக்தர்கள் விழாவையொட்டி காலை, இரவில் வில்லிசை நிகழ்ச்சி நடைபெற்றது. மதியம், இரவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஆடி கொடை விழாவையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்த பக்தர்கள் குலசை முத்தாரம்மன் கோவிலில் குவிந்தனர். ஏராளமான பக்தர்கள் அக்னிசட்டி எடுத்தும், அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர். திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். மஞ்சள் நீராட்டு விழா ஆடி கொடை விழாவையொட்டி சுமார் 300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஆடி கொடை விழாவில் இன்று (வியாழக்கிழமை) காலை 9 மணிக்கு சிறப்பு மகுடம், 11 மணிக்கு கும்பம் வீதி உலா, 11.30 மணிக்கு வில்லிசை நடக்கிறது. மாலை 5 மணிக்கு அம்மன் மஞ்சள் நீராட்டு விழா, இரவு 8.30 மணிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெறுகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/devotional/kulasei-mutharamman-temple-aadi-kodai-festival-devotees-throng




