துப்பாக்கி சூடு மணிப்பூரில் கடந்த சில ஆண்டுகளாக அவ்வப்போது வன்முறை சம்பவங் கள் அரங்கேறி வருகின்றன. அங்குள்ள காங்போக்பி மாவட்டத்தில் மர்ம நபர்கள் திடீர் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்ப டுத்தியது. நேற்று முன்தினம் காலை 8.30 மணியளவில் மகுய் ஆஷாங் மற்றும் தனம்பா நாகா கிராமங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் ஒரு வாகனம் சென்று கொண்டிருந்தது. அங்கு மறைவான பகுதியில் பதுங்கியிருந்த சிலர் ' அந்த வாகனத்தை வழிமறித்து திடீர் துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டனர். இதில் 4 பேர் கொல்லப்பட்டதுடன், ஒருவர் காயமடைந்தார். 4 உடல்கள் மீட்பு இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்தனர். வழியில் ஏற்பட்ட தடையால் அவர்களால் சம்பவ இடத்தை அடைய முடியவில்லை.இந்த நிலையில் நேற்று காலையில் பாதுகாப்பு படையினர் சம்பவ இடம் சென்று அங்கு இறந்து கிடந்தவர்களின் உடல்களை மீட்டனர். கொல்லப்பட் டவர்கள் சாவாங்சினிங் கிராம நிர்வாகத் தலைவர் விஸோபவ் சாரெனாமை, தனியார் பள்ளி நிறுவனர்-முதல்வரான தட்ஸோங்பவ் ரிங்கள்மாய், மற்றும் இருவர் என்று அடையாளம் காணப்பட்டது. அனைவரும் லியாங்மாய் நாகா சமூகத்தைச் சேர்ந்தவர்கள். குக்கி குழு மீது குற்றச்சாட்டு குக்கி தேசிய முன்னணி (பி), குக்கி புரட்சிகர ராணுவம் ஆகிய அமைப்புக ளுக்கு இந்த தாக்குதலில் தொடர்பு இருப்பதாக ஐக்கிய நாகா கவுன்சில் குற்றம்சாட்டியுள்ளது. தாக்குதலில் ஈடுபட்டவர்களை கைது செய்து நடவ டிக்கை எடுக்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/india/sudden-attack-by-unidentified-persons-in-manipur-4-people-including-a-school-principal-shot-dead




