சென்னை, வருகிறர் 28 முதல் 30ஆம் தேதி வரை வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இதனால் தொடர்ந்து 3 நாட்களுக்கு வங்கி சேவைகள் தடைபட உள்ளது. குறிப்பாக மாத கடைசியில், சம்பளம் போடும் தேதியில் வேலை நிறுத்த போராட்டம் நடக்கிறது. எனவே செப்டம்பர் மாத சம்பளம் உரிய தேதியில் கிடைக்குமா என அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் குழப்பத்தில் உள்ளனர். இந்நிலையில் தமிழக அரசு ஊழியர்களின் செப்டம்பர் மாத ஊதியம் மற்றும் ஓய்வூதியம் முன்கூட்டியே வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. செப்டம்பர் 28 முதல் வங்கிகள் மூடப்படுவதால், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு செப்டம்பர் மாதத்திற்கான சம்பளம், படிகள் மற்றும் ஓய்வூதியம் ஆகியவை செப்டம்பர் 25ஆம் தேதி அதாவது வெள்ளிக்கிழமையே கணக்கில் வரவு வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/government-employees-will-be-paid-on-25th-of-this-month-tamil-nadu-govt




