புதுடெல்லி, இந்திய சினிமாவில் உயர்ந்த விருதாக கருதப்படும் தாதா சாகேப் பால்கே விருது, கன்னட சினிமாவின் பிரபல நடிகர் ஆனந்த் நாக்கிற்கு வழங்கப்பட உள்ளது. கேஜிஎப் கன்னட சினிமாவின் பிரபல நடிகர் ஆனந்த் நாக். 50 ஆண்டுகளில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இன்றைய சினிமா ரசிகர்களுக்கு சொல்ல வேண்டும் என்றால் கேஜிஎப் 1 திரைப்படத்தில் அந்த கதையை விவரிக்கும் கதாபாத்திரத்தில் நடித்தார். சங்கல்பா கன்னடத்தில் 1973ல் சங்கல்பா திரைப்படத்தின் மூலம் நாக் தனது முதல் திரைப்படத்தில் அறிமுகமானார். தொடர்ந்து ஹம்சகீதே, சந்தனத கொம்பே, கணேஷனா மதுவே உள்ளிட்ட பல்வேறு வெற்றி படங்களில் நடித்தார். கன்னட சினிமா தாண்டி தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளிலும் நடித்துள்ளார். திரவுபதி முர்மு இந்திய சினிமாவுக்கு இவர் செய்த பங்களிப்பைப் கவுரவிக்கும் விதமாக மத்திய அரசு சார்பில் 2024ம் ஆண்டுக்கான இந்திய சினிமாவின் உயரிய விருதான தாதா சாகேப் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. வருகிற 22-ம் தேதி குஜராத்தில் நடக்கும் விழாவில் இந்த விருதை ஜனாதிபதி திரவுபதி முர்மு கையால் ஆனந்த் நாக் பெறுகிறார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/cinema/cinemanews/dadasaheb-phalke-award-for-kgf-actor-anant-nag


