கடந்த பிப்ரவரி மாத இறுதியில், ஈரான் போர் தொடங்கியதில் இருந்து கச்சா எண்ணெய் 'ஹீரோ'வாகி, தங்கம் 'டல்' அடிக்க தொடங்கியது. இங்கே குறிப்பிடுவது விலை ரீதியாக. இன்னும் ஈரான் போர் 'ஆன். ஆஃப். ஆன். ஆஃப்' மோடில் இருந்தாலும், இப்போது தங்கம் விலை மீண்டும் லைம்லைட்டிற்கு வந்துள்ளது. ஒரு நாளில் சென்னையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.300-உம், பவுனுக்கு ரூ.2,400-உம் உயர்ந்துள்ளது. இன்று சென்னையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.14,250 ஆகும். பவுனுக்கு ரூ.1,14,000 ஆகும். கச்சா எண்ணெய்Mule Accounts: ₹545 கோடி சைபர் மோசடி; 837 பேரை கைதுசெய்த தமிழ்நாடு போலீஸின் ஆபரேஷன்! என்ன, எப்படி? சர்வதேச சந்தையில் தற்போது தங்கம் விலை ஒரு அவுன்ஸிற்குக் கிட்டத்தட்ட 4,390 டாலர்களைத் தொட்டுள்ளது. போர் உச்சத்திலிருந்த வேளையில், ஒரு அவுன்ஸிற்கு 3,900 டாலர்களை எல்லாம் தொட்ட தங்கம், தற்போது ஏறுமுகத்திலிருந்து வருகிறது. இந்த விலை ஏற்றத்தை முதலீட்டாளர்கள் நிச்சயம் கவனிக்க வேண்டிய ஒன்று. ஏன் இந்த ஏற்றம்? அமெரிக்காவின் மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வின் கூட்டம் வருகிற செப்டம்பர் மாதம் நடக்க உள்ளது. அந்தக் கூட்டத்தில் வட்டி விகிதம் அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வட்டி விகிதத்தை உயர்த்தும் அளவிற்கு, தற்போது அமெரிக்காவின் வேலைவாய்ப்பு சந்தை இல்லை. இதனால், வட்டி விகிதத்தை உயர்த்தும் முடிவு அடுத்தடுத்த மாதங்களுக்குத் தள்ளிப்போகலாம் என்று கூறப்படுகிறது. அதனால், முதலீட்டாளர்கள் தங்கத்தின் பக்கம் தங்களுடைய கண்களைத் திருப்பி உள்ளனர். டாலரின் மதிப்பு பெரியளவில் வலுவானதாக தற்போது இல்லை. இதுவும் தங்கத்தின் விலையை உயர்த்துகிறது. தங்கம்மெக்கா ஒப்பந்தம்: பாகிஸ்தானுக்கு கை கொடுத்த சவூதி, துருக்கி; இந்தியாவுக்கு எப்படியான அலாரம்? ஈரான் போரினால் பணவீக்கம் அதிகமாக இருக்கும் என்று நினைக்கப்பட்டது. ஆனால், பெரியளவிற்குப் பணவீக்கத்தில் மாற்றமில்லை. இதுவும் தங்கம் விலையின் ஏறுமுகத்திற்கு ஒரு காரணம். முக்கியமாக, உலக நாடுகளின் மத்திய வங்கிகள் தொடர்ந்து தங்கம் வாங்கி குவித்து வருகிறது. உலகத் தங்க கவுன்சிலின் தரவுகளின் படி, கடந்த ஜூன் மாதத்தில் மத்திய வங்கிகள் 51 டன் தங்கம் வாங்கியுள்ளன. தங்கம் இப்போது வாங்கலாமா? தற்போதைய சந்தையில் தங்கத்தில் பெரியளவில் முதலீடு செய்யாமல், டிரேட் செய்வது நல்லது. எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்பவர்கள் தொடர்ந்து முதலீடு செய்து வரலாம். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.vikatan.com/personal-finance/gold/gold-price-surges-again-why-investors-are-watching-closely




