புனே மராட்டியத்தில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட 3 பெண்களை போலீசார் மீட்டு, மேலாளரை கைது செய்தனர். மராட்டியத்தின் நவி மும்பை நகரில் கார்கர் பகுதியில் ஸ்பா ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில், மசாஜ் என்ற பெயரில் பாலியல் தொழில் நடைபெறுகிறது என தகவல் பரவியது. போலீசார் விசாரணை இதுதொடர்பாக, மனித கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். இதன்படி, வாடிக்கையாளர் போன்று ஒருவரை அனுப்பினர். அவர் ஸ்பாவுக்கு சென்றார். அவரிடம் பாலியல் தொழிலுக்கான பேரம் பேசப்பட்டு உள்ளது. இதனடிப்படையில், போலீசார் அதிரடியாக உள்ளே புகுந்து விசாரித்ததில், அந்த ஸ்பாவில் இருந்த 3 இளம்பெண்கள் மீட்கப்பட்டனர். ஸ்பாவின் மேலாளரான ஆரிப் அஜீஸ் மன்சூரி (வயது 35) கைது செய்யப்பட்டார். அந்த ஸ்பாவின் பெண் உரிமையாளர் மற்றும் அவருடைய கூட்டாளியை போலீசார் தேடி வருகின்றனர். வழக்கு பதிவு இதுபற்றி பாரதீய நியாய சன்ஹித சட்டத்தின் கடத்தல், பொது உள்நோக்கம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் மற்றும் ஐ.டி. (தடுப்பு) சட்டத்துடன் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்கு ஒன்று பதிவாகி உள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/india/maharashtra-spa-sex-trade-3-women-rescued-manager-arrested




