தென்காசி, திருநெல்வேலி மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவில், கடையநல்லூர் ஆகிய கோட்டங்களுக்கு உட்பட்ட துணை மின் நிலையங்களில் நாளை (18.7.2026, சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக பின்வரும் நேரங்களில் மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை சங்கரன்கோவில் கோட்ட செயற்பொறியாளர் ராஜ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மலையாங்குளம், கலிங்கப்பட்டி, திருவேங்கடம், நக்கலமுத்தன்பட்டி ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (18.7.2026, சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் மலையாங்குளம், சிதம்பராபுரம், செவல்குளம், மேலநீலிதநல்லூர், குருக்கள்பட்டி ஆகிய ஊர்களுக்கும், கலிங்கப்பட்டி, சத்திரப்பட்டி, ஆலடிப்பட்டி, மலையடிப்பட்டி, சுப்புலாபுரம், சென்னிகுளம், பாறைப்பட்டி, பருவக்குடி, கரிசல்குளம் மற்றும் ரெங்கசமுத்திரம் ஆகிய ஊர்களுக்கும், திருவேங்கடம், உமையத்தலைவன்பட்டி, ஆலமநாயக்கர்பட்டி, மகாதேவர்பட்டி, ஆலடிப்பட்டி, கரிசல்குளம், குறிஞ்சாகுளம், வெள்ளாகுளம், சங்குப்பட்டி, புதுப்பட்டி, ஆவுடையாள்புரம் மற்றும் குண்டம்பட்டி ஆகிய ஊர்களுக்கும், நக்கலமுத்தன்பட்டி, இளையரசனேந்தல், கொம்பன்குளம், வெங்கடாசலபுரம், புளியங்குளம் அய்யனேரி, அப்பனேரி, ஆண்டிப்பட்டி, மைப்பாறை ஆகிய ஊர்களுக்கும் மின்விநியோகம் தடை செய்யப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். கடையநல்லூர் கோட்ட செயற்பொறியாளர் கற்பகவிநாயகசுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: விஸ்வநாதபேரி துணை மின் நிலையத்தில் நாளை (18.7.2026, சனிக்கிழமை) மாதாந்திர சிறப்பு பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் பின்வரும் இடங்களில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ள நேரத்தில் மின்விநியோகம் இருக்காது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிவகிரி, தேவிபட்டணம், விஸ்வநாதபேரி, தெற்கு சத்திரம், வடக்குசத்திரம், வழிவழிக்குளம், மேலகரிசல்குளம், ராயகிரி, கொத்தாடைப்பட்டி, சொக்கநாதன்புத்தூர், மேலூர் துரைச்சாமிபுரம் மற்றும் வடுகப்பட்டி ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/monthly-maintenance-work-power-outage-in-tenkasi-tomorrow-8




