சென்னை, விஜயலட்சுமி, சமீபத்தில் வெளியிட்ட வீடியோவில், இனிமேல் என்னோட வழக்கை பத்தி நீங்க யாராவது கொச்சையா பேசுனீங்கன்னா, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்காக உறுதியா பேசுவேன் என்று தெரிவித்துள்ளார். விஜய லட்சுமி வெளியிட்ட வீடியோ நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரில் இருதரப்புக்கும் உச்ச நீதிமன்றத்தில் சமரசம் ஏற்பட்டது. பெங்களூரில் வசித்து வரும் விஜயலட்சுமி, இந்த பிரச்சினை முடிவுக்கு வந்த பிறகு வீடியோ எதுவும் வெளியிடாமல் இருந்து வந்தார். இந்த நிலையில், சமீப நாட்களாக மீண்டும் தனது சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிட்டு வருகிறார். வலைத்தளங்களில் சீமானை விமர்சிக்கும் போது விஜயலட்சுமி மீதும் தனிப்பட்ட தாக்குதல்கள் நடத்தப்படுவது அவருக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை தனது வீடியோவில் வெளிப்படுத்தி வரும் விஜயலட்சுமி, சமீபத்தில் வெளியிட்ட வீடியோவில், தவெகவினரை மறைமுகமாக எச்சரித்துள்ளார். விஜயலட்சுமி தனது வீடியோவில் கூறியிருப்பதாவது; என்னை யாராலும் விலைக்கு வாங்க முடியாது இன்னைக்கு நாம் தமிழர் கட்சிக்கு நான் சப்போர்ட்டிவா பேசுன உடனே அடுத்து சொல்லிடுவாங்க, 'நாம் தமிழர் கட்சியோட ஒருங்கிணைப்பாளர் ஒரு பெரிய தொகையை விஜயலட்சுமிக்கு செட்டில் பண்ணிட்டாரு, அதான் அவங்க அந்த பக்கம் பேசிட்டாங்க' அப்படின்னு. ஒன்னும் கிடையாது, என்னை இதுவரைக்கும் பணம் கொடுத்து யாராலும் விலைக்கு வாங்க முடியாது. ‘சீமானுக்காக பேசுவேன்.’ எனக்கு தப்புன்னு தோணுச்சுன்னா நானே பேசுவேன். நான்தான் இத்தனை நாள் நாம் தமிழர் கட்சியை எதிர்த்துட்டு இருந்தேன் இல்லையா? ஆனா நான் ஒரு வாரமா பார்க்கிறேன். ஒருத்தங்க தப்பு பண்ணதை தப்புன்னு உணர்ந்து, அவங்க திரும்பவும் ஒரு வாய்ப்பு கேட்கும்போது அவங்களை வாழ விடணும், அதுதான் மனிதநேயம்னு சொல்றது. அதைதான் நான் பண்ணேன். ஆனா நானும் பார்க்கிறேன், சும்மா பேச்சு எடுத்தா என்னையும் கொச்சைப்படுத்திக்கிட்டு, நாம் தமிழர் கட்சியையும் கொச்சைப்படுத்திட்டு நீங்க இததான் பண்ணிட்டு இருக்கப் போறீங்கன்னா 'ஐ அம் ரெடி'. இனிமேல் என்னோட வழக்கை பத்தி நீங்க யாராவது கொச்சையா பேசுனீங்கன்னா, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்காக உறுதியா பேசுவேன்’ என்றார். தவெகவினரை நேரடியாக விஜயலட்சுமி குறிப்பிடாவிட்டாலும், அவரது விமர்சனம் தவெகவினரை குறிவைத்தே இருப்பதாக நெட்டிசன்கள் பதிவிட்டு வருகிறார்கள். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/cinema/cinemanews/i-am-ready-i-will-stand-by-seeman-vijayalakshmi-issues-a-warning-to-tvk-members




