சென்னை, திருமண நாளையொட்டி சிவகார்த்திகேயன் மற்றும் அவரது மனைவி ஆர்த்திக்கு ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். ‘மெரினா’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான இவர், தொடர்ந்து பல வெற்றிப்படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார். அவரது நடிப்பில் வெளியான ‘அமரன்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அடுத்தடுத்த படங்கள் ‘அமரன்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து வெளியான ‘மதராஸி’ மற்றும் ‘பராசக்தி’ ஆகிய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றன. தற்போது கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாகி வரும் ‘சேயோன்’ திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். மதுரையை பின்னணியாகக் கொண்டு உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. 16-வது திருமண நாள் இந்த நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் இன்று தனது 16-வது திருமண நாளை கொண்டாடி வருகிறார். இதையொட்டி ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் பலரும் அவருக்கும், அவரது மனைவி ஆர்த்திக்கும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். சிவகார்த்திகேயன் சினிமாவுக்கு வருவதற்கு முன்பே தனது மாமா மகளான ஆர்த்தியை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு ஆராதனா என்ற மகளும், குகன் மற்றும் பவன் என்ற இரு மகன்களும் உள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/cinema/cinemanews/actor-sivakarthikeyan-and-aarthi-celebrate-their-16th-wedding-anniversary




