தேவையான பொருட்கள்:- சவ் சவ் - 1 (பெரியது) பாசி பருப்பு - ½ கப் சின்ன வெங்காயம் - 7 பூண்டு - 5 பல் மிளகாய் - 2 தேங்காய் - ½ மூடி சீரகம் - ½ டீஸ்பூன் மஞ்சள் பொடி - ¼ டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு தாளிக்க. தேங்காய் எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன் சின்ன வெங்காயம் - 2 காய்ந்த மிளகாய் - 2 கடுகு - ½ டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிதளவு செய்முறை முதலில், பாசி பருப்பை நன்கு தண்ணீரில் கழுவி ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும். கேஸ் அடுப்பை 'ஆன்' செய்து, அதில் அந்த பாத்திரத்தை வைக்கவும். அத்துடன் 3 கப் தண்ணீர், வெட்டி வைத்த 5 சின்ன வெங்காயம், 4 பல் பூண்டு, மிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்கு வேகவிடவும். மற்றொரு பக்கம், சவ் சவ் காயை தோலை நீக்கிவிட்டு சிறிது சிறிதாக வெட்டி வைத்துக்கொள்ளவும். தேங்காயையும் பல் பல்லாக வெட்டி மிக்சி ஜாரில் எடுத்துக்கொள்ளவும். அத்துடன் 2 சின்ன வெங்காயம், ஒரு பல் பூண்டு, சீரகம், மஞ்சள் பொடி ஆகியவற்றை சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி மையாக அரைத்து எடுத்துக்கொள்ளவும். பாசி பருப்பு வெந்தவுடன் அத்துடன் வெட்டிவைத்த சவ் சவ்வை சேர்க்கவும். தேவையான அளவு உப்பையும் சேர்த்து, நன்கு கிளறிவிட்டு 5 நிமிடம் வேகவிடவும். அத்துடன் அரைத்து வைத்த தேங்காய் கலவையை சேர்க்கவும். நன்கு கலந்துவிட்டு மீண்டும் 5 நிமிடம் வேகவிட்டு அடுப்பில் இருந்து இறக்கவும். அடுத்து தாளிக்க, சட்டியில் தேங்காய் எண்ணெய் எடுத்துக்கொள்ளவும். எண்ணெய் சூடாகியதும், சிறிதளவு வெட்டிவைத்த சின்ன வெங்காயத்தை சேர்க்கவும். வெங்காயம் பொன் நிறமாக வந்தவுடன் காய்ந்த மிளகாய், கடுகு, கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்க்கவும். எல்லாம் பொறிந்ததும், அதை அப்படியே சவ் சவ் கூட்டின் மீது ஊற்றி கிளறிவிடவும். சுவையான சவ் சவ் கூட்டு ரெடி. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/sirappukatturaigal/special-news/sunday-special-how-to-make-delicious-chow-chow-kootu




