புதுடெல்லி, அன்புக்குரியவர்கள் குறித்த தகவலுக்காக ஆவலுடன் காத்திருக்கும் குடும்பத்தினரின் துயரத்திலும் தானும் பங்கேற்பதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ஆழ்ந்த இரங்கல் இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ்வலை தளத்தில் கூறியிருப்பதாவது:- நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பேரழிவுகரமான திடீர் வெள்ளப்பெருக்கு குறித்து நான் மிகுந்த கவலை கொள்கிறேன்; இதில் இந்திய யாத்ரீகர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் காணாமல் போயுள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். தங்கள் அன்புக்குரியவர்கள் குறித்த தகவலுக்காக ஆவலுடன் காத்திருக்கும் குடும்பத்தினரின் துயரத்திலும் நான் பங்கேற்கிறேன். இந்திய அரசு காணாமல் போன இந்தியக் குடிமக்களைக் கண்டறிந்து அவர்களைப் பாதுகாப்பாகத் திரும்ப அழைத்து வருவதை உறுதிசெய்ய, நேபாள அதிகாரிகளுடன் இணைந்து சாத்தியமான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளுமாறு இந்திய அரசை நான் வலியுறுத்துகிறேன். நேபாள மக்களுடனும், இந்தத் துயரமான பேரிடரால் பாதிக்கப்பட்ட அனைவருடனும் நான் உறுதுணையாக நிற்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/india/nepal-floods-i-stand-in-solidarity-with-everyone-affected-by-this-tragic-disaster-rahul-gandhi



