புது டெல்லி, சென்னை விமான நிலைய சரக்கு மையங்களில் ஏற்பட்டுள்ள நெரிசல் காரணமாக, ஏற்றுமதி சரக்குகள் கிட் டத்தட்ட ஐந்து நாட்கள் வரை தேங்குகின்றன. இதனால், ஏற்றுமதியாளர்கள் பெங்களூரு மற்றும் பிற நகரங்களின் விமான சரக்கு மையங்களை பயன்படுத்த தொடங்கி உள்ளனர். இது குறித்து துறை சார்ந்தவர்கள் கூறியதாவது; கிடங்கு வசதி குறைவு, ஆட்கள் பற்றாக்குறை, போக்குவரத்து கட்டுப்பாடுகள் மற்றும் விமான சரக்கு போக்குவரத்து தேவை அதிகரித்திருப்பது ஆகியவை இந்த நெரிசலுக்கு காரணமாக உள்ளன. குறிப்பாக, சரக்குகள் நான்கு முதல் ஐந்து நாட்கள் வரை தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த தாமதம், ஆட்டோமொபைல், எலக்ட்ரானிக்ஸ், ஜவுளி, விரைவில் கெடும் பொருட்கள் போன்ற துறைகளுக்கு பெரும் சவாலாக உள்ளது. உற்பத்தி தொடர் பான சரக்குகள் தாமதமடைவதால், ஏற்றுமதி திட்டங்கள் பாதிக்கப்படுகின்றன. கடந்த இரண்டு மாதங்களில், வளைகுடா பதற்றத்தால் விமான சரக்கு போக்குவரத்து தேவை அதிகரித்திருப்பதும் நெருக்கடியை அதிகரித்துள்ளது. விமான நிறுவனங்கள், திட்டமிட்ட புறப்பாட்டுக்கு முன் மூன்று முதல் ஐந்து நாட்களுக்கு முன்பே சரக்குகளை ஏற்க தொடங்கியுள்ளன. இது கிடங்கு இடத்தை முன் கூட்டியே நிரப்பி, நெரிசலை மேலும் மோசமாக்குகிறது. இதற்கு தீர்வாக, 24 - 36 மணி நேரத்திற்கு முன்பிலிருந்து லாரி நுழைவுக்கு டிஜிட்டல் டோக்கன் முறை அறிமுகப்படுத்த வேண்டும் என தொழில் அமைப்புகள் கோரியுள்ளன. நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், ஏற்றுமதி சரக்குகள் அனைத்தும் பெங்களூரு உள்ளிட்ட மாற்று மையங்களுக்கு மாறி விடும்.” இவ்வாறு எச்சரித்துள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/backlog-of-export-cargo-at-chennai-airport-what-is-the-reason




