சென்னை, ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்த ‘கருப்பு’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து, ‘வாத்தி’, ‘லக்கி பாஸ்கர்’ உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கிய வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படத்தில் சூர்யா நடித்துள்ளார். சூர்யாவின் 46-வது திரைப்படமாக உருவாகியுள்ள இந்த படத்தை நாக வம்சி தயாரித்துள்ளார். இதில் மமிதா பைஜு கதாநாயகியாக நடித்துள்ளார். ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன், பவானி ஸ்ரீ உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்துக்கு நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்துள்ளார். நவின் நூலி படத்தொகுப்பு செய்துள்ளார். ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 14-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் முதல் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ படத்தின் 2-வது பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி இந்த பாடல் வருகிற 25-ந்தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பாடலின் புரோமோ வீடியோ நாளை சூர்யா பிறந்தநாளன்று (ஜூலை 23) வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. — G.V.Prakash Kumar (@gvprakash) July 22, 2026 முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/cinema/cinemanews/suryavin-visvanath-and-sons-padatthin-2-vathu-paadal-veliyagum-thethi-arivippu




