குடியாத்தம், குடியாத்தத்தில் யானை தந்தங்களை விற்க முயன்ற 3 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். வனத்துறை வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் சிலர் யானை தந்தங்களை விற்க இடைத்தரகர்கள் மூலம் முயற்சிப்பதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து மாவட்ட வன அலுவலர் அசோக்குமார் உத்தரவின் பேரில், குடியாத்தம் வனச்சரக அலுவலர் பிரதீப்குமார் தலைமையில் வனவர்கள் குமரேசன், சதீஷ்குமார், ராதாகிருஷ்ணன், ஜெகஜோதி உள்ளிட்ட வனத்துறையினர் நேற்று முன்தினம் இரவு குடியாத்தம் செதுக்கரை பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். விசாரணை அப்போது சந்தேகத்துக்கிடமாக மோட்டார் சைக்கிளில் பையுடன் வந்த 3 பேரை மடக்கி பிடித்து அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்ததில் அதில் 2 அடி நீளம் கொண்ட 2 யானை தந்தங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அவர்களை வனத்துறை அலுவலகத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். கைது அதில் அவர்கள் ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே உள்ள சென்னசமுத்திரம் கிராமத்தை சேர்ந்த விஸ்வநாதன் மகன் திருவேங்கடம் (வயது 38). இவரது உறவினர்கள் அணைக்கட்டு தாலுகா ஒடுகத்தூர் அடுத்த பாக்கம்பாளையம் கிராமத்தை சேர்ந்த முனுசாமி (49), ஆட்டோ டிரைவர் கோவிந்தராஜ் (37) என்பது தெரிய வந்தது. அவர்கள் 3 பேரையும் வனத்துறையினர் கைது செய்து, யானை தந்தம், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். ஆண் யானை இந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் கூறுகையில், திருவேங்கடம், முனுசாமி, கோவிந்தராஜ் ஆகிய 3 பேரும் உறவினர்கள். இவர்கள் ஒரு மாதத்திற்கு முன்பு திருப்பதிக்கு சென்றுள்ளனர். அப்போது திருமலையில் உள்ள பாபநாசம் அணை பகுதிக்கு சென்றபோது ஆண் யானை ஒன்று இறந்து அழுகிய நிலையில் இருந்துள்ளது. அந்த யானையின் தந்தத்தை கையால் இழுத்ததும் வந்துள்ளது. அதனால் தந்தங்களை எடுத்துக்கொண்டு ஊருக்கு வந்துள்ளனர். பின்னர் அதை மறைத்து வைத்துவிட்டு ஆட்டோ டிரைவர் கோவிந்தராஜ் காட்பாடி பகுதியை சேர்ந்த சசிகுமார் என்பவரிடம் அதனை விற்றுத்தருமாறு கூறியுள்ளார். அதன்பேரில் குடியாத்தம் செதுக்கரை பகுதியில் வசிக்கும் முருகன் என்பவர் யானை தந்தங்களை வாங்கிக்கொள்வதாக கூறியதை தொடர்ந்து 3 பேரும் யானை தந்தங்களை கொண்டு வந்தபோது பிடிபட்டதாக தெரிவித்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/2-elephant-tusks-seized-while-trying-to-sell-3-arrested-in-gudiyatham




