நாகை, புகழ்பெற்ற முருகன் தலங்களில் ஒன்றான நாகை மாவட்டம் சிக்கல் சிங்காரவேலவர் கோவிலில் இன்று ஆனி மாத கார்த்திகை வழிபாடு நிகழ்ச்சி நடந்தது. கார்த்திகை தினத்தை முன்னிட்டு சிங்காரவேலவருக்கு, பால், தயிர், சந்தனம், விபூதி, பஞ்சாமிர்தம், பன்னீர், உள்ளிட்ட திரவிய பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்று, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. சிங்காரவேலவர் சிறப்பு மலர் அலங்காரத்தில் வள்ளி, தெய்வானையுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கார்த்திகை சிறப்பு வழிபாடு நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் சிக்கல் அருகே உள்ள பொரவச்சேரி கந்தசாமி கோவிலில் முருகப்பெருமானுக்கு பால், தயிர், சந்தனம், விபூதி, பஞ்சாமிர்தம், பன்னீர், உள்ளிட்டதிரவிய பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/devotional/karthigai-worship-at-sikkal-singara-velar-temple




