சேலம், சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பனங்காட்டூர் கிராமத்து ஏரியில், விவசாய பயன்பாட்டிற்காக வண்டல் மண் எடுக்க அரசு சார்பில் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த அனுமதியைத் தவறாகப் பயன்படுத்திய சில சமூக விரோதிகள், ஏரியின் இயற்கை அரணாக விளங்கும் பனை மரங்களின் வேர்களை ஒட்டியே ஆபத்தான முறையில் விதிகளை மீறி நள்ளிரவிலும், பகலிலும் மண் அள்ளி கடத்தி வந்துள்ளனர். இதனால் நூற்றாண்டு பழமையான பனை மரங்கள் வேரிழந்து, பலத்த காற்று வீசினால் எப்போது வேண்டுமானாலும் சாய்ந்து விழும் அபாயகரமான சூழல் ஏற்பட்டுள்ளது. அதிர்ச்சி பின்னணி வண்டல் மண் எடுக்க அனுமதிக்கப்பட்ட அளவை விட, பாக்லைன் மற்றும் ஜே.சி.பி இயந்திரங்கள் மூலம் மிக ஆழமாக மண் அள்ளப்பட்டுள்ளது. கரையை ஒட்டி ராட்சத பள்ளங்கள் தோண்டப்பட்டதால், பனை மரங்களை தாங்கி நிற்கும் மண் முழுமையாக அரிக்கப்பட்டு, வேர்கள் அந்தரத்தில் தொங்குகின்றன. ஏரியின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் இந்த சட்டவிரோத மண் கடத்தல் குறித்து, அப்பகுதி சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் வட்டாட்சியர் மற்றும் காவல்துறையினருக்கு அவசரப் புகார் அனுப்பினர். மக்கள் புகார் பொதுமக்களின் புகாரை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த ஓமலூர் போலீசார் தீவிர ஆய்வு மேற்கொண்டனர். அனுமதியை மீறி, பனை மரங்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் எல்லையைத் தாண்டி மண் அள்ளி கடத்தியது முதற்கட்ட விசாரணையில் உறுதி செய்யப்பட்டது. தீவிர விசாரணை இதையடுத்து, விதிகளை மீறி செயல்பட்ட நபர்கள் மீது போலீசார் தற்போது வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனங்களை பறிமுதல் செய்யவும், இதில் தொடர்புடைய மர்ம நபர்களைக் கைது செய்யவும் தனிப்படை அமைத்து போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர். மண் அள்ளி கடத்தல் இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், விவசாய நிலங்களுக்கு மண் அள்ளுவதாக அனுமதி பெற்று கொண்டு சிலர் செங்கல் சூளைகளுக்கு மண் அள்ளி கடத்தி செல்கின்றனர். இதனால் ஏரியில் உள்ள பனை மரங்கள், மின் கம்பங்கள் அந்தரத்தில் எப்போது வேண்டுமானாலும் சாய்ந்து விழும் அபாய நிலையில் உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து மண் அள்ளி கடத்துபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மரங்களை பாதுகாக்க வேண்டும் என்று கூறினர். அரசு அனுமதியின் பெயரால் இயற்கை வளங்கள் கொள்ளையடிக்கப்பட்ட இந்த சம்பவம் ஓமலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/illegal-soil-mining-near-omalur-puts-century-old-palms-at-risk




