இரவு 11 மணி. நீங்கள் வேலை பார்க்கும் நாட்டின் கடும் குளிரில் வீட்டின் பால்கனியில் நின்றபடி, "இன்னும் எத்தனை வருஷம் இந்த ஓட்டம்? எப்ப ஊருக்குப் போய் நிம்மதியா வாழ்றது?" - இப்படி என்றாவது யோசித்ததுண்டா? 40-களின் இறுதியிலும் 50-களின் தொடக்கத்திலும் இருக்கும் பெரும்பாலான NRI-களின் கேள்வி இதுதான். வங்கியில் பெரிய தொகை சேமிப்பாக இருந்தாலும், மனதில் ஒரு பயம் இருக்கும். இந்த மன உலைச்சலுக்குப் பின்னால் ஓர் அறிவியல் இருக்கிறது. 30-களில் 'டோபமைன்'. 50-களில் 'செரட்டோனின்'! அறிவியல் படி, நமது மூளையின் தேவை வயதுக்கேற்ப மாறுகிறது: 30-களில் உங்கள் மூளைக்கு 'டோபமைன்' (Dopamine) தேவைப்பட்டது: இது சாதனைக்கான ஹார்மோன். "அடுத்த பதவி உயர்வு என்ன?", "இன்னும் ஒரு கோடி சேர்ப்பது எப்படி?" என்று உங்களை ஓட வைத்தது இந்த டோபமைன்தான். 50-களில் உங்கள் மூளை ஏங்குவது 'செரட்டோனின்' (Serotonin): இது அமைதி மற்றும் மனநிறைவுக்கான ஹார்மோன். இந்த வயதில் மூளைக்குச் சவால்களை விட, "எல்லாம் பாதுகாப்பா இருக்கு; இனி பதறத் தேவையில்லை" என்ற நிம்மதிதான் தேவை. இங்குதான் பலர் தப்பு செய்கிறார்கள். உங்கள் மனமும் உடலும் 'செரட்டோனின்' நிலைக்கு மாறிவிட்டன. ஆனால், உங்கள் பணமும் முதலீடுகளும் இன்னும் 'டோபமைன்' அமைப்பிலேயே இருக்கின்றன. 50 வயதிலும் "பங்குச்சந்தை என்ன ஆச்சு?", "சொத்து மதிப்பு கூடுமா?" என்று தினமும் பதற்றத்தோடு இருந்தால், மூளையில் மனஅழுத்தம்தான் கூடும்; நிம்மதி கிடைக்காது. பணத்துக்கு பாதுகாப்புPersonal Finance: இந்த மாதிரி பட்ஜெட் போட்டா, 10 வருஷத்துல ₹23 லட்சம் சேர்க்கலாம்! நிதிச் செரட்டோனின் பெறுவது எப்படி? தாயகம் திரும்பி, எதைப் பற்றியும் கவலையின்றி வாழ உங்கள் பணத்தை இப்படித் தயார் செய்யுங்கள்: பணப்புழக்கம் (Cash Flow) முக்கியம்: 30-களில் "பணத்தை எப்படி இரட்டிப்பாக்குவது?" என்று யோசித்திருப்பீர்கள். ஆனால் 50-களில் "என் அன்றாட செலவுக்குப் பணம் தடையின்றி வருதா?" என்று மட்டுமே பார்க்க வேண்டும். 10 கோடி ரூபாய் சொத்து இருந்து, மாதச் செலவுக்குக் கையில் பணம் இல்லை என்றால் பயன் இல்லை. தூக்கத்திற்கு முன்னுரிமை கொடுங்கள்: அதிக லாபம் தருகிறது என்பதற்காக, தினமும் தூக்கத்தைக் கெடுக்கும் முதலீடுகளைத் தவிருங்கள். ஓரளவு குறைவான, ஆனால் உறுதியான மாதாந்திர வருமானம் தரும் வழிகளில் பணத்தை மாற்றுவதே புத்திசாலித்தனம். தானியங்கி வருமானம்: நீங்கள் வேலையை நிறுத்தினாலும், உங்கள் வங்கியின் மாதாந்திர வருமானம் தானாக வந்துகொண்டே இருக்க வேண்டும். Labham Workshop on oct 03, 2026 NRI வாழ்க்கையின் முதல் பாதியை உழைப்பிலும் தியாகத்திலும் கழித்துவிட்டீர்களா? போனது போகட்டும். உங்கள் வாழ்வின் இரண்டாம் பாதி உங்களுக்கானது. 50-களில் உங்களுக்குத் தேவை அதிக சொத்துக்கள் அல்ல; அளவற்ற மன அமைதிதான். உங்கள் சேமிப்பை மாதாந்திர வருமானமாக மாற்றி, தாய்மண்ணில் நிம்மதியாக வாழ வேண்டுமா? 'லம்சம் முதலீடு மூலம் மாத வருமானம் பெறுவது எப்படி?' - இலவச நிதி வழிகாட்டல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு 2-வது வருமானம்/மாத பென்ஷன் பெரும் வழிகளை அறிந்துகொள்ளுங்கள்! வரும் சனி, அக்டோபர் 03, 2026 அன்று மதியம் 12:30 மணிக்கு இந்திய நேரம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 100 பேருக்கு மட்டுமே அனுமதி, முன்பதிவு கட்டாயம். ரெஜிஸ்டர் செய்ய: Personal Finance: 5 ஆண்டுகளுக்கு மேல் யோசிக்கத் தெரியாதவர்களா நாம்? ஷேர் மார்கெட்டும் பொறுமையும் முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.vikatan.com/personal-finance/how-nris-can-ensure-monthly-income-from-their-investment-in-their-50s




