வெளிநாட்டில் பல ஆண்டுகள் உழைத்து, 50 வயதை எட்டியுள்ள என்.ஆர்.ஐ (NRI) நண்பர்களுக்கு வணக்கம்! 50 வயதில் எழும் மிகப்பெரிய கேள்வி: "சேர்த்து வைத்துள்ள பணத்தை (Lumpsum Amount) எங்கே முதலீடு செய்வது?" மொத்தப் பணத்தையும் பங்குச்சந்தையில் போட்டால் ரிஸ்க் அதிகம்; அதேநேரம் வங்கியில் போட்டு வைத்தால் அது பணவீக்கத்தால் கரையத் தொடங்கும். எனவே, பாதுகாப்பு (Safety) மற்றும் வளர்ச்சி (Growth) ஆகிய இரண்டையும் சமன் செய்வதே முக்கியம். இதனை எப்படி செய்வது? படிப்படியாகப் பார்ப்போம். மாதிரி முதலீட்டு உத்தி உங்களிடம் ₹1 கோடி Lumpsum தொகை இருப்பதாக வைத்துக்கொள்வோம்: 1. Safety Bucket (60% = ₹60 Lakhs) இலக்கு: முதன்மை முதலீட்டைப் பாதுகாப்பது மற்றும் நிலையான வருமானம். எங்கே முதலீடு செய்யலாம்? * NRE FDs: இந்தியாவில் NRE எஃப்.டி வட்டிக்கு முழு வருமான வரி விலக்கு (Income Tax-Free) உண்டு. * AAA Corporate Bonds: 7.5% - 8.5% வரை நிலையான வட்டி தரும் உயர்தர பாண்டுகள். 2. Growth Bucket (40% = ₹40 Lakhs) இலக்கு: பணவீக்கத்தை வீழ்த்தி நிதியைப் பெருக்குவது. எங்கே முதலீடு செய்யலாம்? * லார்ஜ் கேப் மற்றும் ஃபிளெக்சி கேப் மியூச்சுவல் ஃபண்டுகள். * STP Strategy: ₹40 லட்சத்தையும் ஒரே நாளில் போடாமல், Liquid Fund-ல் போட்டு அங்கிருந்து STP மூலம் 24-36 மாதங்களில் பிரித்து முதலீடு செய்ய வேண்டும். இவற்றில் எதிர்பார்க்கப்படும் வருமானம்: ~11% - 12% p.a. (7 ஆண்டுகளுக்கு மேல் முதலீடு செய்யும் பட்சத்தில்). Lumpsum Investment NRI-கள் கவனிக்க வேண்டிய 3 முக்கிய விஷயங்கள் NRE vs NRO: வெளிநாட்டு வருமானத்தை NRE கணக்கு மூலம் முதலீடு செய்தால் வட்டிக்கு வரி இல்லை; பணத்தை வெளிநாட்டிற்கு எடுத்துச்செல்வதும் எளிது. சந்தை நேரத்தைக் கணிக்காதீர்கள்: மொத்தப் பணத்தையும் ஒரே நேரத்தில் ஈக்விட்டியில் போடுவதைத் தவிர்த்து, STP (Systematic Transfer Plan) முறையைப் பயன்படுத்துங்கள். இதனால் சந்தை ஏற்ற இறக்கத்தைச் சமாளிக்க முடியும். அவசரகால நிதி: 6-12 மாத காலச் செலவுகளுக்குத் தேவையான பணத்தை NRE Savings Account-ல் தயாராக வைத்திருக்க வேண்டும். நீங்கள் லம்ப்சம் முதலீடு செய்ய வேண்டுமா? உங்களுக்கான சிறப்பு வழிகாட்டல்! 50+ வயதுக்கு மேல் லம்ப்சம் முதலீட்டை மிகுந்த எச்சரிக்கையுடன் மேற்கொள்வது எப்படி? இதுவரை நாம் வாழ்நாளில் சேர்த்து வைத்த பணத்துக்கு நல்ல வருவாய் பெறுவது எப்படி? பணத்தைப் பாதுகாப்பாப்பது எப்படி? அனைத்தையும் அறிந்துகொள்ள, வரும் சனி (ஆகஸ்ட் 08), மதியம் (இந்திய நேரம்) 12:30 மணிக்கு நடைபெறும் முதலீட்டு வழிகாட்டல் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளுங்கள். இடங்கள் குறைவே. இப்போதே முன்பதிவு செய்ய: முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.vikatan.com/personal-finance/how-nris-can-invest-in-lumpsum-after-50-years-age




