மும்பை, மும்பையை அடுத்த பத்லாப்பூர் கிழக்கு சிர்காவ் பகுதியை சேர்ந்தவர் ஹரி ராம் சிங்(வயது35). மாற்றுத்திறனாளி. இவரது மனைவி சுனிதா தேவி(30). இவர்களுக்கு 7 வயதில் மகன் உள்ளார். சுனிதா தேவி, கடந்த 19-ந்தேதி தலையில் காயத்துடன் கணவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அவர் கணவர் தவறி விழுந்து காயம் ஏற்பட்டதாக கூறினார். டாக்டர்கள் நடத்திய சோதனையில் ஹரிராம் சிங் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது. சுனிதா தேவியின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த போலீசார் அவரது 7 வயது மகனிடம் விசாரணை நடத்தினர். அப்போது சுனிதா தேவி கணவரை கொலை செய்த அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. இதே போல பிரதே பரிசோதனை அறிக்கையிலும் ஹரிராம் சிங் கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது. சேலை வாங்கி தராததால். இதையடுத்து போலீசார் சுனிதா தேவியை கைது செய்து விசாரணை நடத்தினர். சம்பவத்தன்று சேலை வாங்கி தருமாறு கணவரை சுனிதா தேவி கேட்டுள்ளார். இதற்கு கணவர் மறுக்கவே, இருவருக்கும் தகராறு ஏற்பட் டது. இதில் ஆத்திரமடைந்த சுனிதா தேவி, கணவரை குக்கர் மூடியால் தலையில் ஓங்கி தாக்கி உள்ளார். மேலும் கழுத்தை நெரித்துள்ளார். இதில் ஹரிராம் சிங் பரிதாபமாக உயிரிழந்தது தெரியவந்தது. சேலைக்காக கொலை செய்தாரா? போலீசார் விசாரணை கைதான சுனிதா தேவியை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். கோர்ட்டு அவரை 29-ந்தேதி வரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டது. சுனிதா தேவி சேலைக்காக தான் கணவரை கொலை செய்தாரா? அல்லது வேறு காரணங்கள் ஏதேனும் உள்ளதா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/india/wife-beats-husband-to-death-with-a-pressure-cooker-in-a-fit-of-rage-over-his-failure-to-buy-her-a-saree




