சென்னை முதல் அமைச்சர் விஜய்யை தலைமை செயலகத்தில் மத்திய இணை மந்திரி ராம்தாஸ் அத்வாலே சந்தித்து பேசினார். இந்திய குடியரசுக்கட்சியின் தலைவரும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் முக்கிய கட்சியின் தலைவருமாக இருக்கக்கூடிய ராம்தாஸ் அத்வாலே முதல் அமைச்சர் விஜய்யை சந்தித்து இருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது. மரியாதை நிமித்தமாக இந்தசந்திப்பு நடைபெற்று இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பின்போது பல்வேறு பொதுநலன் மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து இருவரும் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக பேசிய ராம்தாஸ் அத்வாலே, தேர்தலுக்குப் பிறகு தமிழகத்தில் ஆட்சி அமைக்க பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லையென்றால் தவெக தலைவர் விஜய்யுடன் பேசி தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று பேசி பரபரப்பை கிளப்பியிருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/india/union-minister-of-state-ramdas-athawale-meets-chief-minister-vijay




