புதுச்சேரி, ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது; தி.மு.க., கூட்டணியில் இருந்தபோது, நல்ல காரியங்களை பாராட்டி இருக்கிறேன். அதேபோல் நாங்கள் அவமானப்படுத்தபட்டபோது தாங்கி கொண்டிருந்தேன். விஜயுடன் ம.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்களை ராஜினாமா செய்துவிட்டு, இடைத்தேர்தலில் நிற்பது குறித்து பேசவில்லை. பா.ஜ.க, எதிர்ப்பு நிலைப்பாட்டில் விஜய் உள்ளார். தமிழகத்தில், ஊழலற்ற நேர்மையான ஆட்சி நடத்துகிறார் முதல்வர் விஜய். தமிழகத்தின் ஊழல் பெருச்சாளி தி.மு.க.,தான். அனிதாராதாகிருஷ்ணன் கைது, வினை விதைத்தவன் வினையறுப்பான் என்பதை காட்டுகிறது. கட்சி மாறும் போது, பழைய கட்சியை விமர்சனம் செய்வது எல்லா கட்சிகளிலும் நடக்கிறது. தி.மு.க., கூட்டணியை விட்டு வெளியே வந்த பிறகு தொண்டர்களிடம் ஏற்பட்ட பெருமூச்சின் வெளிப்பாடுதான் துரை வைகோ எம்.பி.,யின் கருத்து.” இவ்வாறு அவர் கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/india/chief-minister-vijay-is-governing-tamil-nadu-honestly-and-without-corruption-vaiko




