ஈரோடு, ஈரோடு வழியாக செல்லும் 6 ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் நிரந்தரமாக இணைக்கப்பட உள்ளது. கூடுதல் பெட்டி அதிகரித்து வரும் பயணிகளின் பயண தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், ஈரோடு வழியாக செல்லும் 6 எக்ஸ்பிரஸ் ரெயில்களில் நிரந்தரமாக கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுகின்றன. அதன்படி சென்னை எழும்பூரில் இருந்து இரவு 11.10 மணிக்கு புறப்படும் சென்னை எழும்பூர் -மங்களூரு சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் ரெயிலில் (வண்டி எண் 16159) ஒரு 'ஸ்லீப்பர் கிளாஸ்' பெட்டி நேற்று முன்தினம் இணைக்கப்பட்டுள்ளது. மங்களூரு சென்ட்ரலில் இருந்து காலை 6.45 மணிக்கு புறப்படும் மங்களூரு சென்ட்ரல் -சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் விரைவு ரெயிலில் (வண்டி எண் 16160) ஒரு 'ஸ்லீப்பர் கிளாஸ்' பெட்டியும், சென்னை சென்ட்ரலில் இருந்து காலை 7.15 மணிக்கு புறப்படும் சென்னை சென்ட்ரல் - கோவை சந்திப்பு சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயிலில் (வண்டி எண் 12243) ஒரு 'ஏசி சேர் கார்' பெட்டியும், கோவை சந்திப்பிலிருந்து பிற்பகல் 3.05 மணிக்கு புறப்படும் கோவை சந்திப்பு சென்னை சென்ட்ரல் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயிலில் (வண்டி எண் 12244) ஒரு 'ஏசி சேர் கார்' பெட்டியும் இன்று முதல் (வியாழக்கிழமை) நிரந்தரமாக இணைக்கப்பட உள்ளது. நிரந்தரமாக இணைப்பு சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து மாலை 4 மணிக்கு புறப்படும் சென்னை சென்ட்ரல் -திருவனந்தபுரம் ஏசி எக்ஸ்பிரஸ் ரெயிலில் (வண்டி எண் 22207) நாளை (வெள்ளிக் கிழமை) முதல் ஒரு ஏசி 3 டயர் பெட்டியும், திருவனந்தபுரத்தில் இருந்து இரவு 7.15 மணிக்கு புறப்படும் திருவனந்தபுரம் -சென்னை சென்ட்ரல் ஏசி எக்ஸ்பிரஸ் ரெயிலில் (வண்டி எண் 22208) வருகிற 4-ந்தேதி முதல் ஒரு ஏசி 3 டயர் பெட்டியும் நிரந்தரமாக கூடுதலாக இணைக்கப்பட உள்ளது. மேற்கண்ட தகவல் சேலம் ரெயில்வே கோட்டம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/permanent-addition-of-additional-coaches-to-6-express-trains-passing-through-erode




