சென்னை, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினின் பேரனும், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினின் மகனுமான இன்பநிதி, லண்டன் மான்செஸ்டர் நகரில் உள்ள கல்லூரியில் விளையாட்டு மேம்பாடு தொடர்பான உயர் படிப்பை முடித்துள்ளார். இன்பநிதியின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், தனது மனைவி துர்கா ஸ்டாலினுடன் சென்னையில் இருந்து விமானம் மூலம் கடந்த 4-ம் தேதி லண்டன் புறப்பட்டு சென்றார். லண்டனில் 15 நாட்கள் தங்கி ஓய்வெடுக்க திட்டமிட்டுள்ள அவர், அங்கு பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கவும் திட்டமிட்டுள்ளார். பேரனின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட பிறகு, 18-ந்தேதி அவர் சென்னை திரும்புவார் என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் நடந்த இன்பநிதியின் பட்டமளிப்பு விழாவில் மு.க.ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது இன்பநிதியை மு.க.ஸ்டாலின் கட்டியணைத்து வாழ்த்து தெரிவித்தார். இதுதொடர்பான புகைப்படம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இதைபோல தந்தை உதயநிதி ஸ்டாலினும் மகன் இன்பநிதியை கட்டியணைத்து வாழ்த்து தெரிவித்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/graduation-ceremony-mkstalin-hugs-grandson-inbanidhi-and-congratulates-him




