திருச்சி, தமிழ்நாட்டின் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் ரூ. 2,500 உரிமைத் தொகை வழங்கப்படும் என தவெக கொடுத்த தேர்தல் உத்தரவாதம் தொடர்பாக அமைச்சர் ரமேஷ் முக்கிய தகவலை தெரிவித்துள்ளார். முந்தைய திமுக அரசு, கடந்த 2023-ம் ஆண்டு முதல் தகுதியுள்ள மகளிருக்கு மாதம் ரூ. 1,000 கலைஞர் உரிமைத் தொகையை வழங்கி வந்தது. இந்நிலையில், 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் இந்தத் தொகையை ரூ. 1,500 ஆக உயர்த்தி வழங்கப்படும் என திமுகவும், ரூ. 2,500ஆக வழங்கப்படும் என தவெகவும் தேர்தல் வாக்குறுதிகளைக் கொடுத்தன. குறைத் தீர்ப்பு முகாம் இந்நிலையில், திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் தொகுதி எம்.எல்.ஏ.வும், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சருமான ரமேஷ், தனது தொகுதி மக்களுக்கான குறைத் தீர்ப்பு முகாம் நடத்தினார். இதில் பொதுமக்களிடம் இருந்து அவர் கோரிக்கை மனுக்களை பெற்றார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ரமேஷ், மகளிர் உரிமைத் தொகை தொடர்பான கோரிக்கை மனுவோடு இருப்பவர்கள், அதனை கொடுப்பதற்காக காத்திருக்க வேண்டாம். தமிழ்நாடு முதல்-அமைச்சர், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. 2,500 கொடுப்பதை தேர்தல் வாக்குறுதியாக கொடுத்திருந்தார். அனைவருக்கும் மகளிர் உரிமை தொகை அந்தத் திட்டத்தை முதல்-அமைச்சர் கையெழுத்திட்டு தொடங்கும்போது, நிச்சயம் உங்களின் அனைத்து பெயர்களும் அந்தத் திட்டத்தில் இடம் பெறும். குறிப்பாக இதுவரை உரிமைத் தொகை பெற்றவருவோரின் பெயர்கள் உட்பட அனைத்து குடும்பத் தலைவிகளின் பெயரும் அந்தத் திட்டத்தின் கீழ் வந்துவிடும். எனவே அதற்கான மனு கொடுக்க காத்திருப்பவர்கள் இங்கு காத்திருக்க வேண்டாம் எனத் தெரிவித்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/womens-rights-for-everyone




