தமிழக அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தை தமிழக முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தொடங்கி வைத்தார். திட்டத்தின் தொடக்க நிகழ்வில் புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு முதலமைச்சர் தங்க மோதிரம் அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். தமிழர் பாரம்பரியத்தில் தாய்மாமன் வழங்கும் சீர் என்பதை அடிப்படையாகக் கொண்டு இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தலா ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் வகையில் திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. முதலமைச்சரின் மதுரை வருகையையொட்டி, நகரின் பல்வேறு பகுதிகளில் கட்சித் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டிருந்தனர். குறிப்பாக பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் காலை முதலே வெயிலையும் பொருட்படுத்தாமல் காத்திருந்தனர். முதல்வரை வரவேற்கும் வகையில், தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி வண்ணத்தில் சேலை அணிந்த பெண்கள், ‘TVK’ என்ற பெயருடன் அலங்கரிக்கப்பட்ட ஆரத்திக் குடங்களை ஏந்தியபடி வரவேற்பு அளித்தனர். மேலும், சிலர் விஜயை அன்புடன் ‘குட்டி எம்.ஜி.ஆர்.’ என்றும், அண்ணனாகவும் அழைத்து வரவேற்றனர். முதல்வர் விஜய் மருத்துவமனை நிகழ்ச்சி நிறைவடைந்த பின்னர், அங்கு திரண்டிருந்த பொதுமக்கள் மற்றும் தொண்டர்களை பார்த்த முதலமைச்சர் விஜய் கையசைத்து வணக்கம் தெரிவித்தார். பின்னர் ரூ.10.25 கோடி மதிப்பில் புனரமைக்கப்பட்ட மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தை திறந்து வைத்து பார்வையிட்டார். காந்தி அருங்காட்சியகத்தில் மகாத்மா காந்தி பயன்படுத்திய பொருட்கள் உள்ளிட்ட நினைவுச்சின்னங்களை முதலமைச்சர் பார்வையிட்டார். இதையடுத்து மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று வழிபட்டார் இந்த நிகழ்ச்சிகளில் அமைச்சர்கள் என். ஆனந்த், அருண்ராஜ், நிர்மல்குமார் உள்ளிட்டோர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். மேலும் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.vikatan.com/government-and-politics/cadres-welcomed-chief-minister-vijayhailed-as-a-little-mgrwith-aarthi-pots




