மதுரை: மதுரையில் முதல்-அமைச்சர் விஜய்யை நேரில் பார்க்க வந்த 10-க்கும் மேற்பட்டோர் திடீரென மயக்கம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. முதல்-அமைச்சர் விஜய் மதுரையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வந்திருந்தார். அவரை வரவேற்கவும், நேரில் பார்க்கவும் ஏராளமான ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் காந்தி அருங்காட்சியகம் வளாகம் மற்றும் அதனைச் சுற்றிய பகுதிகளில் காலை முதலே திரண்டிருந்தனர். 10-க்கும் மேற்பட்டோர் மயக்கம் நீண்ட நேரமாக வெயிலில் நின்று காத்திருந்த நிலையில், கூட்டத்தில் இருந்த 10-க்கும் மேற்பட்டோருக்கு திடீரென மயக்கம் மற்றும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறையினர் உடனடியாக விரைந்து சென்று மயக்கம் அடைந்தவர்களை மீட்டு முதலுதவி அளித்தனர். பின்னர், சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்ட ஆம்புலன்ஸ்கள் மூலம் அனைவரும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் காந்தி அருங்காட்சியகம் வெளியே சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. கூட்ட நெரிசல் மற்றும் வெயிலின் தாக்கம் காரணமாக சிலருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. காவல்துறையினர் கூட்டத்தை ஒழுங்குபடுத்தி பாதுகாப்பு ஏற்பாடுகளை மேலும் தீவிரப்படுத்தினர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/more-than-10-people-who-came-to-see-chief-minister-vijay-in-madurai-fainted




