பாலக்காடு, கேரளம் மாநிலம் பாலக்காடு மாவட்டம் கொழிஞ்சாம்பாறை அருகே மேனோன்பாறை கூராங்காடு பகுதியில் வசிப்பவர் ஜான் குமார் (வயது 36). தொழிலாளி. இவரது மனைவி நிவேத்யா (29). இவர்களுக்கு ஜெனிபர் ஜூலியட் (வயது 5) என்ற மகளும், ராபின் கிறிஸ்டோபர் (3) என்ற மகனும் உள்ளனர். ஜெனிபர் ஜூலியட் ஒரு பள்ளியில் எல்.கே.ஜி. படித்து வந்தாள். இந்தநிலையில் ஜெனிபர் ஜூலியட், ராபின் கிறிஸ்டோபர் ஆகிய 2 பேரும் நேற்று முன்தினம் வீட்டில் விளையாடி கொண்டிருந்தனர். பின்னர் அவர்கள் குளியலறையில் உள்ள தொட்டியில் மூழ்கி கிடந்தனர். இதையடுத்து தொட்டியில் குழந்தைகள் தவறி விழுந்து விட்டதாக கூறி நிவேத்யா சத்தம் போட்டார். உடனே அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து குழந்தைகளை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். கள்ளக்காதல் அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், ஜெனிபர் ஜூலியட், ராபின் கிறிஸ்டோபர் ஆகிய 2 பேரும் இறந்து விட்டதாக தெரிவித்தனர். முதல் கட்ட விசாரணையில், வீட்டில் விளையாடியபோது அக்காள், தம்பி தொட்டியில் தவறி விழுந்து நீரில் மூழ்கி இறந்து இருக்கலாம் என கொழிஞ்சாம்பாறை போலீ சார் சந்தேகித்தனர். பின்னர் 2 பேரின் உடல்களை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாலக்காடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக நிவேத்யாவிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர். இதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதாவது, நிவேத்யாவுக்கு ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இது கள்ளக்காதலாக மாறியது. இதற்கு இடையூறாக குழந்தைகள் இருப்பதாக கருதி உள்ளனர். இதனால் குழந்தைகளை தீர்த்துக்கட்ட நிவேத்யா முடிவு செய்தார். தண்ணீரில் மூழ்கடித்து. அதன்படி, சம்பவத்தன்று ஜான்குமார் வேலைக்கு சென்ற பிறகு, வீட்டில் இருந்த குழந்தைகளை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து நிவேத்யா கொலை செய்தார். இந்த சம்பவம் வெளியே தெரியாமல் இருக்கவும், போலீசில் சிக்காமல் இருக்கவும் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து இறந்து விட்டதாக நாடகமாடியது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து நிவேத்யாவை போலீசார் கைது செய்தனர். அவரது கள்ளக்காதலனுக்கு கொலையில் தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/india/mother-drowns-her-children-in-water-to-prevent-illegal-marriage




