வாஷிங்டன், இந்திய பிரதமர் மோடி- ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியானை ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாட்டையொட்டி, கிர்கிஸ்தானில் கடந்த 31-ந் தேதி சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு குறித்து, அமெரிக்க வெளியுறவு மந்திரி மார்கோ ரூபியோ, பிரபல ரேடியோ நிகழ்ச்சிக்கு அளித்த நேர்காணலில் கூறியதாவது:- இந்தியாவும் ஈரானும் வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேசி வருவதாக நான் கருதவில்லை. ஈரான் மீதான அமெரிக்க தடைகளை எந்த நாடும் மீறி, அந்த நாட்டுக்கு வருவாய் கிடைக்க உதவக்கூடாது, அவ்வாறு செயல்படும் நாடுகள் மீதும் அமெரிக்கா தடைகள் விதிக்க நேரிடும். இவ்வாறு அவர் கூறினார். இது மறைமுகமாக இந்தியாவை எச்சரிக்கும் வகையில் உள்ளதால், அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/world/us-warns-india-of-sanctions-for-trading-with-iran



