சென்னை, எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவ படிப்புகளில் சேருவதற்காக நேற்று சென்னையில் நடைபெற்ற சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வில் மாற்றுத்திறனாளிகள் பிரிவில் கலந்துகொண்ட ஒருவர் வியப்பை ஏற்படுத்தினார். 51 வயதில் எம்.பி.பி.எஸ். சீட் நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த 51 வயது பூர்த்தி செய்திருக்கும் சுரேஷ்குமார் என்பவர் எம்.பி.பி.எஸ். சீட்டை தட்டிப் பறித்து இளைஞர் பட்டாளத்துடன் படிப்பில் போட்டி போட தயாராகியிருக்கிறார். "சாதிக்க வயது ஒரு தடையில்லை" என்பதற்கு சுரேஷ்குமார் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக மாறியுள்ளார். தமிழ் வழியில் நீட் தேர்வு பள்ளிப்படிப்பை முடித்து மருத்துவ படிப்பை படிக்க ஆசைப்பட்ட சுரேஷ்குமாருக்கு அப்போது அது சாத்தியப்படவில்லை. இந்த நிலையில் 2022-ம் ஆண்டு மருத்துவப் படிப்பு ஆசை மீண்டும் பொறித்தட்ட நீட் தேர்வை தமிழ் வழியில் எழுதினார். ஆனால் அதில் அவரால் சாதிக்க முடியவில்லை. இதையடுத்து கடந்த ஆண்டு மருத்துவப் படிப்பு கலந்தாய்வில் தாயும், மகளும் சேர்ந்து மருத்துவ இடங்களை தேர்வு செய்த செய்தி அவருக்கு மேலும் உந்துதலை கொடுத்தது. மாற்றுத்திறனாளிகள் பிரிவில் மருத்துவ படிப்பு கலந்தாய்வு அதன் அடிப்படையில் 2026-ம் ஆண்டு நீட் தேர்வை எழுதி 192 மதிப்பெண் எடுத்திருந்த சுரேஷ்குமார், 2019-ல் நடந்த விபத்தில் அவருக்கு ஏற்பட்ட காயத்தை சுட்டிக்காட்டி மாற்றுத்திறனாளிகள் பிரிவில், நேற்று நடந்த கலந்தாய்வில் பங்கேற்று நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்பை தேர்வு செய்திருக்கிறார். டாக்டராக வலம் வருவேன் இதுகுறித்து சுரேஷ்குமார் கூறுகையில், 'ரத்த பரிசோதனை மார்க்கெட்டிங் பிரிவில் பணியாற்றி வந்தேன். இப்போது என்னுடைய வேலையை உதறிவிட்டு, படிப்பை தொடர போகிறேன். சொந்த ஊரில் உள்ள கல்லூரியிலேயே படிக்க போகிறேன். நிச்சயம் மருத்துவப் படிப்பை நிறைவு செய்து டாக்டராக வலம் வருவேன்' என்றார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/there-is-no-age-limit-to-achieve-mbbs-seat-at-the-age-of-51



