சென்னை, தமிழ்நாடு மின்சாரவாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- பள்ளிக்கரணை பகுதியில் சாய்ந்திருந்த 110 கி.வோ. அதிஉயரழுத்த மின் கோபுரம் குறித்து பொதுமக்களுக்கு விளக்கம் ஒரு வார காலத்திற்குள் சீரமைப்பு பணிகள் முடிக்ககப்படும். சமூக வலைதளங்களிலும், நாளிதழ்களிலும் வெளியாகியுள்ள தகவல்களின் அடிப்படையில் பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ள சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் தமிழ்நாடு மின்வாரியம் கீழ்க்கண்டவாறு தெரிவித்து கொள்கின்றது. மின்கோபுரம் பள்ளிக்கரணை சதுப்பு நிலப் பகுதியில், குப்பைக் கிடங்கிற்கு அருகில் அமைந்துள்ள 110 கி.வோ. இடிஎல் தரமணி மற்றும் 110 கி.வோ. சிறுசேரி இடிஎல் இருவழி மின்கோபுரம், அண்மையில் ஏற்பட்ட இயற்கை காரணங்களால் 10.07.2026 அன்று சாய்ந்த நிலையில் கண்டறியப்பட்டது. சீரமைப்பு பணி தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கோபுர மின் பாதை பராமரிப்பு பிரிவு, வழக்கமானஆய்வுப்பணியின் போது 10.07.2026 அன்று கோபுரம் சாய்ந்திருப்பதை உடனடியாக கண்டறிந்தது. இதையடுத்து, 11.07.2026 முதல் அவசர சீரமைப்பு பணிகள் போர்க்கால அடிப்படையில் தொடங்கப்பட்டன. ஆய்வு மேலும், எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் அறிவுறுத்தலின் படி, கடந்த12.07.2026 அன்று கூடுதல் தலைமை செயலாளர்/ தமிழ்நாடு மின்சார வாரிய தலைவர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு, சீரமைப்பு பணிகளை விரைவாக மேற்கொள்ள தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். தவறான தகவல்கள் இந்நிலையில், 12.07.2026 அன்று சமூக வலைதளங்களில், இந்த கோபுரம் கீழே விழுந்தால் தென் சென்னை முழுவதும் மின்தடை ஏற்படும் என தவறான தகவல்கள் பரப்பப்பட்டன. அதனை தொடர்ந்து, 14.07.2026 அன்று வெளியான ஒரு நாளிதழில், கோபுரம் சாய்ந்த நிலையில் இருந்தும் எந்த சீரமைப்பு பணியும் மேற்கொள்ளப்படவில்லை என்ற செய்தியும் வெளியாகியுள்ளது. புதிய மின் கோபுரம் இந்த தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என்பதை தமிழ்நாடு மின்சார வாரியம் தெளிவுபடுத்துகிறது. உண்மையில், புதிய மின் கோபுரம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. புதிய கோபுரம் நிறுவுதல் மற்றும் மின்கம்பிகள் பொருத்தும் பணிகள் இன்னும் ஒரு வாரத்திற்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொது மக்கள் சமூக வலைதளங்களில் பரவும் ஆதாரமற்ற தகவல்களை நம்பாமல், தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிடும் அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டுமே நம்புமாறு அன்புடன் கேட்டு கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/high-voltage-electricity-tower-leaning-in-the-pallikaranai-area-electricity-board-to-complete-repair-work-within-a-week




