புதுடெல்லி, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பிறப்பு-இறப்பு பதிவு திருத்த சட்டம், அக்டோபர் 1-ந் தேதி அமலுக்கு வருகிறது. நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம் கடந்த 1969-ம் ஆண்டு, பிறப்பு-இறப்பு பதிவு சட்டம் கொண்டுவரப்பட்டது. அதன்மூலம், பிறப்பு, இறப்பை பதிவு செய்வது கட்டாயம் ஆக்கப்பட்டது. அந்த சட்டத்தில், 2023-ம் ஆண்டு திருத்தம் கொண்டுவரப்பட்டது. இதற்கிடையே, பிறப்பு, இறப்பை உரிய நேரத்தில் பதிவு செய்ய பொதுமக்களை ஊக்குவிக்கும் நோக்கத்திலும், தாமதமாக பதிவு செய்வதற்கான விதிமுறைகளை கடுமையாக்கும் நோக்கத்திலும் பிறப்பு-இறப்பு பதிவு சட்டத்தின் 13(3)-வது பிரிவில் மத்திய அரசு திருத்தம் செய்தது. இந்த திருத்த மசோதா, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. ஜனாதிபதி ஒப்புதலுடன் கடந்த மாதம் சட்டமானது. 1-ந் தேதி அமல் இந்நிலையில், பிறப்பு-இறப்பு பதிவு திருத்த சட்டம், 2026 அக்டோபர் 1-ந் தேதி அமலுக்கு வருகிறது. இந்திய பதிவாளர் ஜெனரல் மிருத்யுஞ்சய் குமார் நாராயண், அரசிதழ் அறிவிப்பாணையில் இத்தகவலை தெரிவித்துள்ளார். புதிய திருத்தத்தின்படி, பிறப்பு, இறப்பு நடந்து ஓராண்டில் இருந்து 2 ஆண்டுகளுக்குள் பதிவு செய்வதற்கு ஏற்கனவே இருப்பதுபோல், மாவட்ட கலெக்டர், உதவி கலெக்டர் அல்லது அங்கீகரிக்கப்பட்ட நிர்வாக மாஜிஸ்திரேட்டின் உத்தரவைப் பெற வேண்டும். மாஜிஸ்திரேட் உத்தரவு பிறப்பு, இறப்பு ஏற்பட்டு 2 ஆண்டுகளுக்கு பிறகு அதை பதிவு செய்ய வேண்டுமானால், உயர்மட்ட அளவில் கடுமையான நீதித்துறை ஆய்வுக்கு உட்படுத்தப்படும். அதாவது, முதல் வகுப்பு ஜூடிசியல் மாஜிஸ்திரேட் உத்தரவைப் பெற்றுத்தான் பதிவு செய்ய முடியும் என்பது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/india/registration-of-births-and-deaths-amendment-act-effective-from-october-1




