கேரளா, கேரள மாநிலத்தில் கற்பழிக்கப்பட்ட 14 வயது சிறுமியின் 28 வார கர்ப்பத்தை கலைக்க ஐகோர்ட்டு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. கேரளா ஐகோர்ட்டில் வழக்கு கேரள மாநிலத்தில், கற்பழிப்பால் பாதிக்கப்பட்ட 14 வயது சிறுமி கருத்தரித்தாள். தற்போது, 28 வார கர்ப்பத்தை சுமந்து கொண்டு இருக்கிறாள். கர்ப்பத்தை மருத்துவரீதியாக கலைக்க அனுமதிக்கக்கோரி அந்த சிறுமியின் தந்தை கேரள ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். 14 வயது சிறுமியின் கருவை கலைக்க ஐகோர்ட்டு அனுமதி அந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி ஹரிசங்கர் வி மேனன் பிறப்பித்த உத்தரவில், "கர்ப்பத்தால் சிறுமிக்கு ஏற்பட்ட மனவேதனையை கவனத்தில் கொள்ள வேண்டும். சிறுமியின் வயது 14 ஆக இருப்பதாலும், கர்ப்பத்தை சுமக்க விரும்பாததாலும் கர்ப்பத்தை கலைக்கக்கோரும் மனுவை அனுமதிக்க வேண்டி உள்ளது. ஆகவே சிறுமியும், அவரது தந்தையும் எழுத்துப்பூர்வமாக உத்தரவாதம் அளித்தால், கர்ப்பத்தை கலைக்க மாநில அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்" என்று கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/india/kerala-high-court-allows-termination-of-28-week-pregnancy-of-14-year-old-girl-who-was-raped




