ரவி மோகனின் மனைவி ஆர்த்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "உங்களை குணப்படுத்துகிறேன் என்று யாராவது சொன்னால் அவர்களை விரட்டி அடியுங்கள்" என்று காட்டமாக பதிவிட்டுள்ளார். நடிகர் ரவி மோகன் தன் மனைவி ஆர்த்தியிடமிருந்து விவாகரத்து பெறுவதற்கான முயற்சிகளில் இருப்பதால் கடந்த ஓராண்டாகவே சமூக வலைதளங்களில் பேசுபொருளாக உள்ளார். மனைவியைப் பிரிந்தவர் பாடகி கெனிஷாவுடன் இணைந்து வாழ்ந்து வந்தார். இருவரும் பொது நிகழ்வுகளில் ஒன்றாகக் கலந்துகொள்வது, படத்தின் புரமோஷன்களுக்கு வருவது என ஜோடியாக இருந்தனர். ஆனால், அண்மையில் ரவி மோகனை விட்டு பிரிவதாக கெனிஷா அறிவித்தார். இதையடுத்து ரவி மோகன் அளித்த பேட்டியில், “நான் விவாகரத்து பெறும் வரை என்னுடைய நடிப்பில் படங்கள் வெளியாகாது” என தெரிவித்தார். அவருடைய இந்த பேட்டி சமூக வலைதளங்களில் வைரலானது. அத்துடன் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கின் மீதான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், ஜெயம் ரவிக்கு பிள்ளைகளை பார்க்க அனுமதி அளித்தும், அவர் மாதம் 3 லட்சம் ரூபாய் ஆர்த்தி ரவிக்கு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் ரவி மோகனின் மனைவி ஆர்த்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “உங்களை குணப்படுத்துகிறேன் என்று யாராவது சொன்னால் அவர்களை விரட்டி அடியுங்கள்” என்று காட்டமாக பதிவிட்டுள்ளார். இந்த பதிவில், அவர் யார் பெயரையும் குறிப்பிடவில்லை என்றாலும், அவர் நேரடியாக கெனிஷாவைத்தான் குறிப்பிடுகிறார் என்று ரசிகர்கள் பதிவிட்டுள்ளார்கள். ஜெயம் ரவிக்கு ஹீலர் என்ற முறையில் அறிமுகமானவர்தான் கெனிஷா. பிறகு இருவருக்குள்ளும் நட்பு மலர்ந்து அவர்கள் ஒன்றாகவே பொது வெளியில் தோன்றத் தொடங்கினர். View this post on Instagram முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/cinema/cinemanews/chase-them-away-ravi-mohans-ex-wifes-post-goes-viral




