இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓடிடி-யில் வெளியாகியிருக்கும் படங்கள் இவைதான்! ஸ்பைடர்-மேன்: பிராண்ட் நியூ டே (Spider Man: Brand New Day) டெஸ்டின் டேனியல் கிரெட்டன் இயக்கியுள்ள இப்படத்தில் டாம் ஹாலண்ட், ஜெண்டயா, ஜான் பெர்ன்தால் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 'ஸ்பைடர்-மேன்: பிராண்ட் நியூ டே', மார்வெலின் 38-வது படமாக உருவாகியுள்ளது. இத்திரைப்படம் (ஜூலை 30) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. புளூட்டோ (Pluto - மலையாளம்) ஆதித்யன் சந்திரசேகர் இயக்கியுள்ள இப்படத்தில் நீரஜ் மாதவ், அல்தாப் சலீம், அஜு வர்கீஸ், ஆர்ஷா பைஜு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 'விக்கி' என்ற கதாபாத்திரம், தனித்து விடப்பட்ட ஒரு வேற்றுக்கிரகவாசியைச் சந்திக்கும்போது, அவர்களின் எதிர்பாராத நட்பு இருவரின் வாழ்க்கையையும் என்றென்றைக்குமாக மாற்றிவிடுகிறது. நகைச்சுவை மற்றும் சாகசங்கள் நிறைந்த கலகலப்பான அறிவியல் புனைவே (Sci-Fi) இதன் கதைக்களம். இத்திரைப்படம் (ஜூலை 30) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. Spider Man: Brand New Day உன்மத்தம் (Unmatham - மலையாளம்) கிரண் தாஸ் இயக்கியுள்ள இப்படத்தில் குஞ்சாக்கோ போபன், லிஜோமோல் ஜோஸ், சித்திக் ஆகியோர் நடித்துள்ளனர். தனது கடந்த காலத்தின் சுமையைச் சுமக்கும் ஒரு காவலர், நீண்ட காலமாக மறக்கப்பட்ட மற்றும் தீர்க்கப்படாத ஒரு வழக்கின் விசாரணையில் ஈடுபடுகிறார். அவர் அதை ஆழமாக ஆராயும்போது மறைக்கப்பட்ட ரகசியங்கள் வெளிவரத் தொடங்குகின்றன. இதனால், தனது நம்பிக்கைகளுக்குச் சவால் விடும் மற்றும் தன் வாழ்க்கையையே என்றென்றும் மாற்றியமைக்கக்கூடிய சங்கடமான உண்மைகளை அவர் எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இதுவே இதன் கதைக்களம். இத்திரைப்படம் (ஜூலை 31) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ஶ்ரீனிவாச மங்காபுரம் (Srinivasa Mangapuram - தெலுங்கு) அஜய் பூபதி இயக்கியுள்ள இப்படத்தில் ஜெய் கிருஷ்ணா கட்டமனேனி, ராஷா தடானி, ஷியாம் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். வாசு பாபு மற்றும் மங்கா ஆகிய இரு கவலையற்ற இளம் காதலர்களின் காதலுக்குத் திடீரென ஓர் ஆபத்து நேர்கிறது. அவர்களைப் பிரித்துவிடக்கூடிய இக்கட்டான சூழல் உருவாகும்போது, எப்பாடுபட்டாவது தன் காதலியைப் பாதுகாக்க வாசு பாபு தீவிர உறுதியுடன் போராடுகிறான் என்பதே இதன் கதைக்களம். இத்திரைப்படம் (ஜூலை 30) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. கட்டா குஸ்தி 2 விமர்சனம்: வலிமையான இரண்டாம் பாகம்தான்; ஆனால் திரைக்கதையில் மீண்டும் அதே குஸ்தியா?Nooru Saami இந்த வார ஓடிடி (OTT) ரிலீஸ்கள்: திரையரங்கத்திலிருந்து ஓடிடி-க்கு நூறு சாமி - ZEE5 கட்டா குஸ்தி 2 - Netflix பாலன்: தி பாய் (Balan: The Boy - மலையாளம்) - ZEE5 ஹை ஜவானி தோ இஷ்க் (Hai Jawani Toh Ishq - இந்தி) - ZEE5 ராவ் பகதூர் (Rao Bahadur - தெலுங்கு) - Netflix தி டெவில் வேர்ஸ் பிராடா 2 (The Devil Wears Prada 2 - ஆங்கிலம்) - Jio Hotstar தீவானா (Deewana - தெலுங்கு, தமிழ்) - Aha இந்த வாரம் வெளியாகியிருக்கும் வெப் சீரிஸ்கள்: பேட்மேன்: கேப் Crusader சீசன் 2 (Batman: Caped Crusader Season 2 - ஆங்கிலம்) - Prime Video தி லெஜண்ட் ஆஃப் கர்ணா (The Legend of Karna) - Sony LIV Balan Review: 'தாய் - மகனின் த்ரில்லர் போராட்டம்' - 'மஞ்சும்மல் பாய்ஸ்' இயக்குநரின் படம் எப்படி? முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://cinema.vikatan.com/kollywood/this-week-theatre-and-ott-releases-spider-man-pluto-unmatham




