சென்னை, மெட்ரோ ரெயில் பணிகள் காரணமாக சென்னை திருமங்கலம் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த மாற்றமானது ஓராண்டு காலம் நடைமுறையில் இருக்கும் எனவும் சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டத்தின் ஒரு பகுதியாக திருமங்கலம் 100 அடி சர்வீஸ் சாலையில் மேம்பால பாதை கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதனையொட்டி வரும் ஜூலை 13-ந்தேதி முதல் அடுத்த வருடம் ஜூலை 12-ந்தேதி வரை தற்காலிக போக்குவரத்து மாற்றங்கள் அமல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 100 அடி சாலையின் இடதுபுற சர்வீஸ் சாலையில் அனைத்து வாகனங்களுக்கும் போக்குவரத்து முழுமையாக தடை செய்யப்பட்டிருக்கிறது. பாடி மேம்பாலத்தில் இருந்து அம்பத்தூர் நோக்கி செல்லும் வாகனங்கள் 18-வது பிரதான சாலை அல்லது 6-வது அவென்யூ வழியாக செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோயம்பேடு செல்லும் வாகனங்கள் பாடி மேம்பாலத்தில் இருந்து கோயம்பேடு நோக்கி செல்ல வழக்கம் போல் திருமங்கலம் மேம்பாலம் வழியாக செல்லலாம். அந்த வழியில் எந்த மாற்றமும் இன்றி பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மெட்ரோ கட்டுமான பணிகள் திட்டமிட்டு காலக்கெடுவில் நிறைவடையும் எனவும், போக்குவரத்து நெரிசலை தவிர்க்க வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மற்றும் அப்பகுதி குடியிருப்பவர்கள் போக்குவரத்து மாற்றங்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/thirumangalam-metro-work-traffic-diversion-for-one-year-police-announcement




