பெங்களூரு, இந்தியாவின் சிலிக்கான் வேலி என்று அழைக்கப்படும் பெங்களூரு மாநகரின் போக்குவரத்து நெரிசல், இப்போது பிரதான சாலைகளைத் தாண்டி, மக்களின் குடியிருப்பு வளாகங்களுக்குள்ளும் நுழைந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீட்டு வாசலிலேயே தொடங்கும் டிராபிக் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் வர்த்தூர் பகுதியில் ஒரு மாபெரும் அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது. அங்கு பிரதான சாலைகளில் மட்டுமே வாகன ஓட்டிகள் டிராபிக்கில் சிக்குவார்கள். ஆனால் கடந்த சனிக்கிழமை மதியம் 2 மணியளவில், இந்த பிரம்மாண்ட டவுன்ஷிப்பில் வசிப்பவர்கள், தங்கள் வீட்டை விட்டு வெளியேறி மெயின் ரோட்டிற்கு செல்வதற்கே சுமார் 30 நிமிடங்கள் வரை காரில் காத்திருக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதனை அந்த குடியிருப்பில் வசித்து வரும் பெண் ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. அந்த வீடியோவில் நூற்றுக்கணக்கான கார்கள் அப்பார்ட்மெண்ட் வளாகத்தின் உள்ளேயே நீண்ட வரிசையில் ஸ்தம்பித்து நிற்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன. ஒரே ஒரு நுழைவாயில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வசிக்கும் இந்த மெகா அடுக்குமாடி குடியிருப்பில், வாகனங்கள் வெளியேற வரையறுக்கப்பட்ட கேட்கள் மட்டுமே உள்ளன. வார இறுதி நாளில் ஒரே நேரத்தில் பலரும் வெளியேற முயன்றதால் இந்த நெரிசல் ஏற்பட்டுள்ளது. வர்த்தூர்-ஒயிட்பீல்டு பிரதான சாலைகளில் நிலவும் கடுமையான போக்குவரத்து நெரிசல் காரணமாக, அடுக்குமாடி குடியிருப்பின் கேட்டைத் தாண்டி வாகனங்களால் முன்னோக்கி நகர முடிவதில்லை. அந்த டிராபிக் அப்படியே பின்னோக்கி வந்து வளாகத்திற்குள் எதிரொலித்துள்ளது. திட்டமிடப்படாத உள்கட்டமைப்பு உரிய போக்குவரத்து திட்டமிடல் இன்றி கட்டப்படும் இத்தகைய பிரம்மாண்ட குடியிருப்புகளால், எதிர்காலத்தில் பெங்களூரு நகரவாசிகளின் அன்றாட வாழ்க்கை இன்னும் மோசமாகும் என நெட்டிசன்கள் தங்களது குமுறல்களை வெளிப்படுத்தி வருகின்றனர். "சாலைகளில் டிராபிக் இருந்த காலம் போய், இப்போது வீட்டிற்குள்ளேயே டிராபிக் ஜாம் ஏற்படும் நிலைக்கு பெங்களூரு தள்ளப்பட்டுள்ளது" என இந்த வீடியோவைப் பார்த்த பலரும் சமூக வலைதளங்களில் கவலை தெரிவித்து வருகின்றனர். View this post on Instagram முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/india/traffic-jams-extending-beyond-the-roads-and-into-apartment-complexes-do-you-know-where




