பீகாரில் பாட்னா கூடுதல் மாவட்ட மாஜிஸ்திரேட்டாக இருப்பவர் ரவீந்திர குமார் திவாகர். அவரது மனைவி குமாரி ஸ்வீட்டி, டானாபூர் மாவட்ட துணைப் பதிவாளராக இருக்கிறார். இரண்டு பேரும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகப் புகார் வந்தது. இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இரண்டு பேரின் வீடுகளில் ஒரே நேரத்தில் ரெய்டு நடத்தினர். இந்த ரெய்டில் பணம் மற்றும் நகைகளுடன் சொத்து, வங்கிக் கணக்குகள், முதலீடுகள் மற்றும் நிதிப் பரிவர்த்தனைகள் தொடர்பான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை எண்ணுவதற்கு இயந்திரங்கள் சம்பவ இடத்திற்குக் கொண்டு வரப்பட்டன. லஞ்ச ஒழிப்புத்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் பணம், நகைகள் மற்றும் பிற ஆவணங்களைச் சரிபார்த்தனர். இதுவரை, பாட்னா மற்றும் பெகுசராய் பகுதியில் உள்ள தம்பதிகளின் வீடுகளில் இருந்து, 1 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணம், பல கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் மற்றும் ஆடம்பர கடிகாரங்கள் மீட்கப்பட்டுள்ளன. எனினும், மீட்கப்பட்ட பணம் மற்றும் தங்க நகைகளின் சரியான அளவு மற்றும் மதிப்பு விசாரணை முடிந்த பின்னரே உறுதி செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரெய்டில் ரூ.80 லட்சம், ரூ.6 லட்சம் மதிப்புள்ள 48 ஆடம்பர கைக்கடிகாரங்கள், தங்கம், வைரம் மற்றும் வெள்ளி நகைகள், சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பாட்னாவில் ரூ.1.07 கோடி மதிப்புள்ள இரண்டு பிளாட்கள் இரண்டு பேர் பெயரில் இருப்பது தெரிய வந்துள்ளது. இது தவிர குமாரி மற்றும் அவரது தந்தை பெயரில் ரூ. 1.28 கோடி மதிப்பில் பாட்னாவில் மூன்று மனைகளை வாங்கி இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திவாகர் 2000 ஆம் ஆண்டில் அரசாங்கப் பணியில் ஆசிரியராகச் சேர்ந்தார். பின்னர் பதவி உயர்வு பெற்று அவர் அக்டோபர் 2025ம் ஆண்டு கூடுதல் மாவட்ட மாஜிஸ்திரேட்டாக மாறினார். அவரது மனைவி 2013ம் ஆண்டே துணை பதிவாளராகப் பணியில் சேர்ந்தார். ரூ.3.28 கோடி லஞ்சம். பினராயி விஜயன் குடும்பத்துக்குக் குறி? முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.vikatan.com/crime/raid-at-bihar-government-officials-home-1-crore-in-cash-jewelry-and-assets-seized




