சென்னை, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்படி முன்னுரிமை மற் றும் அந்தியோதயா அன்ன யோஜனா ரேஷன் அட்டைகளின் ஆதார் விவரங்களை சரிபார்ப்பதற்காக மின்னணு ரேஷன் அட் டையில் இணைக்கப்பட்ட அனைத்து பயனாளிகளின் கை ரேகை அடிப்படையிலான சரிபார்ப்பினை மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி குடும்ப உறுப்பினர்களுக்கு ஏதும் இடையூறுமின்றி இப்பணியினை செய்திட அறிவுறுத்தப்பட்டு கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் முதல் குடும்ப உறுப்பினர்களின் கைவிரல் ரேகை சரிபார்ப்பு பணி நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி முன்னுரிமை ரேஷன் அட்டைகளில் 96.21 சதவீதம் கைவிரல் ரேகை சரிபார்ப்பு பணியானது மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த கைவிரல் ரேகை பதிவினை 100 சதவீதம் நிறைவு செய்யும்பொருட்டு வருகிற 29-ந் தேதி (சனிக்கிழமை) அன்று தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் சிறப்பு முகாம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது. எனவே, இதுவரை, ரேஷன் கடைகள் மூலம் கைவிரல் ரேகைப்பதிவு செய்யப்படாமல் விடுபட்டுள்ள ரேஷன் அட்டைதாரர்கள் 29-ந் தேதி மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் நடைபெறும் சிறப்பு முகாமினை பயன்படுத்தி தங்களது கைவிரல் ரேகைப் பதிவினை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/fingerprint-registration-special-camp-at-ration-shops-across-tamil-nadu-on-the-29th



