மும்பை, நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் நடித்துள்ள ‘ஜுக்னி’ ஆல்பம் சமீபத்தில் வெளியானது. சோனு துக்ரல் மற்றும் பி. பிராக் இணைந்து பாடிய இந்த பாடலின் வீடியோவில், ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு ஆடை தொடர்பான குறைபாடு இருந்ததாக கூறி, ஒரு குறிப்பிட்ட காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதையடுத்து, பாடலின் தயாரிப்புக் குழு அந்தக் காட்சியை மங்கலாக்கி மீண்டும் வெளியிட்டது. ஆனால், சில நாட்களுக்குப் பிறகு அந்த மாற்றம் நீக்கப்பட்டு, பழைய வடிவிலேயே வீடியோ மீண்டும் வெளியிடப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் சமூக வலைதளங்களில் இந்த விவகாரம் மீண்டும் பேசுபொருளாக மாறியது. இந்த நிலையில், பாடகர் சோனு துக்ரல் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். சைபர் கிரைம் குற்றப்பிரிவு அதிகாரியிடம் புகார் மனுவை அளிக்கும் போட்டோவை தனது சோஷியல் மீடியாவில் வெளியிட்டு, ‘எனது ஜுக்னி பாடலின் வீடியோ காட்சி ஏஐ தொழில்நுட்பம் மூலம் போலியாக மாற்றப்பட்டு இணையத்தில் பரப்பப்பட்டு வருகிறது. இதுகுறித்து விரைவில் விரிவாக பகிரங்கமாக நான் பேசுவேன்’ என்று குறிப்பிட்டுள்ளார். அதேநேரத்தில், இந்த விவகாரம் குறித்து ஜாக்குலின் பெர்னாண்டஸ் மற்றும் பாடல் தயாரிப்பாளர்கள் தரப்பில் இருந்து எந்தவொரு விளக்கமும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/cinema/cinemanews/controversy-over-the-circulation-of-a-famous-actresss-obscene-video-complaint-filed-with-the-cyber-crime-wing




