சென்னை, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- இராமேஸ்வரம் துறைமுகத்தில் இருந்து 469 விசைப்படகுகளில், மீனவர்கள் நேற்று முன்தினம் (22.07.2026) கடலில் மீன் பிடிக்க சென்றுள்ளனர். இவர்களில் 9 மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, இலங்கை கடற்படையினர் 9 மீனவர்களையும் கைது செய்து, அவர்களது உடைமைகளையும் பறிமுதல் செய்து கொண்டு சென்றுள்ளனர். மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மாலிக்தினார், கயாஸ், செந்தில், கிரித்திசன், பிரவீன், அருள்லயோலா, சவுரி வினோத்வின், தேவசகாயம், இன்பென்ட் பிரசாத் ஆகிய 9 மீனவர்களையும் விடுவித்து, அவர்களது உடைமைகளையும் மீட்டு தர வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு மத்திய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தை வலியுறுத்திக் கேட்டுக் கொள்வதுடன், தமிழ்நாடு முதல்-அமைச்சர், மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து மீனவர்களை விடுதலை செய்ய உதவ வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/communist-party-of-india-appeals-to-the-chief-minister-to-release-the-fishermen-captured-by-the-sri-lankan-navy




