சென்னை, உயர்கல்வி துறை சார்பில் ரூ.274.46 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கல்விசார் கட்டடங்களை தமிழ்நாடு முதல்-அமைச்சர் ச. ஜோசப் விஜய் திறந்து வைத்தார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது:- முதல்-அமைச்சர் திறந்து வைத்தார் தமிழ்நாடு முதல்-அமைச்சர் ச.ஜோசப் விஜய் இன்று தலைமைச் செயலகத்தில், உயர்கல்வி துறை சார்பில், அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகள், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், அரசு பொறியியல் கல்லூரிகள் மற்றும் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் 274 கோடியே 46 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைக் கட்டடங்கள், ஆய்வகக்கட்டடங்கள், பணிமனை கட்டடங்கள், திறன்மிகு மையங்களுக்கான பணிமனைகள், நூலகங்கள், மின்னணு நூலகங்கள், செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் கட்டடங்கள் உள்ளிட்ட பல்வேறு கட்டடங்களை திறந்து வைத்தார். திறந்து வைக்கப்பட்ட முடிவுற்ற பணிகளின் விவரங்கள் சென்னை மாவட்டம் மாவட்டம் தரமணி, செங்கல்பட்டு செங்கல்பட்டு மற்றும் குரோம்பேட்டை, திருவள்ளுர் மாவட்டம் செவ்வாய்பேட்டை, கள்ளக்குறிச்சி மாவட்டம் - சங்கராபுரம், தருமபுரி மாவட்டம் பூமண்டஹள்ளி மற்றும் பாலக்கோடு, கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம், பர்கூர் மற்றும் ஊத்தங்கரை, திருவண்ணாமலை மாவட்டம் நாகப்பாடி, நீலகிரி மாவட்டம் பெருந்துறை, திருச்சிராப்பள்ளி மாவட்டம் - திருச்சிராப்பள்ளி மற்றும் ஸ்ரீரங்கம், நாமக்கல் மாவட்டம் -உதகமண்டலம், ஈரோடு மாவட்டம் மோகனூர், புதுக்கோட்டை மாவட்டம் சிவகங்கை கந்தர்வகோட்டை மற்றும் அறந்தாங்கி, தஞ்சாவூர் மாவட்டம்- ரகுநாதபுரம், திருவாரூர் மாவட்டம் வலங்கைமான், சிவகங்கை மாவட்டம் மற்றும் காரைக்குடி, தேனி மாவட்டம் கோட்டூர் மற்றும் ஆண்டிப்பட்டி, மதுரை மாவட்டம் மதுரை, அம்பலக்காரன்பட்டி மற்றும் உசிலம்பட்டி, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில், தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி மற்றும் எட்டயபுரம், வேலூர் மாவட்டம் மாதனூர், கடலூர் மாவட்டம் கடலூர் மற்றும் விருதாச்சலம், இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி, கோயம்புத்தூர், அரியலூர், பெரம்பலூர், கரூர், நாகர்கோவில், மற்றும் திருப்பூர் ஆகிய இடங்களில் அமைந்துள்ள அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளில் 226 கோடியே 98 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைக் கட்டடங்கள், ஆய்வகக் கட்டடங்கள், பணிமனைக் கட்டடங்கள், திறன்மிகு மையங்களுக்கான பணிமனைகள், நூலகம், மின்னணு நூலகம், செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் கட்டடங்கள். ஆய்வகங்கள் சேலம் மற்றும் ஈரோடு அரசு பொறியியல் கல்லூரிகளில் 6 கோடியே 8 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறைகள், ஆய்வகங்கள், நூலகக் கட்டடங்கள்; சென்னை, செங்கல்பட்டு, திருப்பூர், சிவகங்கை, வேலூர் மாவட்டம் மாதனூர், கடலூர் மாவட்டம் கடலூர் மற்றும் விருதாச்சலம், இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆகிய இடங்களில் அமைந்துள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 35 கோடியே 40 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைகள், ஆய்வகங்கள், மின்னணு நூலக கட்டடங்கள்; ஆய்வகங்கள், மின்னணு நூலகக் கட்டடங்கள். வகுப்பறை கட்டடங்கள் வேலூர் மாவட்டம் - திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் 6 கோடி ரூபாய் செலவில் சமூகவியல், சுற்றுச்சூழல் அறிவியல் மற்றும் நுண்ணுயிர் அறிவியல் ஆகிய மூன்று துறைகளுக்கு கட்டப்பட்டுள்ள வகுப்பறை கட்டடங்கள்; என மொத்தம் 274.46 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள உயர்கல்வித்துறை சார்ந்த 51 கட்டடங்களை தமிழ்நாடு முதல்-அமைச்சர் திறந்து வைத்தார். கலந்து கொண்டனர் இந்த நிகழ்ச்சியில், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறை அமைச்சர் என். ஆனந்த், பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, உயர்கல்வித் துறை அமைச்சர் பெ.விஸ்வநாதன், தலைமைச் செயலாளர் மு. சாய்குமார், உயர்கல்வி துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ் குமார், கல்லூரிக் கல்வி ஆணையர் திரு. பொன்னையா, தொழில்நுட்பக் கல்வி ஆணையர் பொ. இரத்தினசாமி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/education-buildings-inaugurated-by-chief-minister-at-cost-of-rs-274-46-crore




